PF பயனாளர்கள்.., இனி ஈஸியான முறையில் உங்க Balance-ஐ செக் செய்து கொள்ளலாம்.., முழு விபரம் உள்ளே!!

0
PF பயனாளர்கள்.., இனி ஈஸியான முறையில் உங்க Balance-ஐ செக் செய்து கொள்ளலாம்.., முழு விபரம் உள்ளே!!
PF பயனாளர்கள்.., இனி ஈஸியான முறையில் உங்க Balance-ஐ செக் செய்து கொள்ளலாம்.., முழு விபரம் உள்ளே!!

அரசு மற்றும் தனியார் துறை ஊழியர்களின் மாதாந்திர ஊதியத்தில், குறிப்பிட்ட பணம் PF கணக்கில் வரவு வைக்கப்பட்டு வருகிறது. இந்த கணக்கின் இருப்பை தெரிந்து கொள்ள, சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் Salary Slip வழங்கும் வரை காத்திருக்க வேண்டிய சூழ்நிலை முன்னதாக இருந்தது. தற்போது டிஜிட்டல் வளர்ச்சி அடைந்து வருவதால், ஆன்லைன் முறையில் எப்போது வேண்டுமானாலும் PF இருப்பு அறிந்து கொள்ளும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

அதன்படி,

SMS:

உங்களது PF கணக்கில் கொடுக்கப்பட்டுள்ள செல்போன் நம்பரில் இருந்து 77382 99899 என்ற எண்ணுக்கு EPFOHO UAN TAM என டைப் செய்து அனுப்பினால், உடனடியாக இருப்பு விவரங்களை அறிந்து கொள்ளலாம்.

UMANG ஆப்:

தங்களது மொபைலில் UMANG செயலியை பதிவிறக்கம் செய்து UAN நம்பரை பதிவிட்டு லாகின் செய்து கொண்டு, எளிதாக PF அக்கவுண்டில் உள்ள பண இருப்பை பார்த்துக் கொள்ளலாம்.

EPFO ஆன்லைன்:

https://unifiedportal-mem.epfindia.gov.in/memberinterface/ என்ற இணையதளத்தில் சென்று UAN நம்பர் மற்றும் பாஸ்வோர்ட் கொண்டு லாகின் செய்து கொண்டும் பண வரவு மற்றும் இருப்பை கண்டறியலாம் என அறிவுறுத்தி உள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here