Friday, April 26, 2024

ஆன்லைன் வகுப்புகளுக்கு நேர கட்டுப்பாடு – மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் வெளியீடு..!!

Must Read

ஆன்லைன் வகுப்புகளுக்கான அட்டவணை மற்றும் நெறிமுறைகளை அதிகாரப்பூர்வமாக மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் வெளியிட்டு உள்ளது.

கொரோனா பரவல்:

கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு பல்வேறு மாவட்டங்களில் அதிகமாக பரவி வந்து உள்ளது. இதனை தடுக்க மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கை மேற்கொண்டு வந்து உள்ளது. அதில் கடந்த மார்ச் மாதம் 24 ஆம் தேதி முதல் பொது முடக்கம் அமலில் உள்ளது. அதனால் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் போன்றவை இன்னும் திறக்கப்படாத நிலையில் உள்ளது.

corona virus
corona virus

ஆனால், நடப்பு கல்வி ஆண்டு தொடங்க ஆரம்பித்து உள்ளதால் பல பள்ளிகளில் ஆன்லைன் மூலம் படங்கள் மற்றும் வகுப்புகள் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது. இது பலரிடையே அதிர்ப்பித்தியை ஏற்படுத்தியது.

school kids
school kids

பெற்றோர்கள், சமூக ஆர்வலர்கள் இதற்கு கடும் கண்டனம் தெரிவித்து வந்தனர். அதனால், மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் இதற்கு தீர்வாக பல நெறிமுறைகளை கொண்ட அறிக்கை ஒன்றை வெளியிட்டு உள்ளது.

வழிகாட்டு நெறிமுறைகள்:

குழந்தைகளின் உடல் மற்றும் மனநலத்தை கருத்தில் கொண்டு இந்த வழிகாட்டு நெறிமுறைகள் கொடுக்கபட்டு உள்ளன.

  • கிண்டர் கார்டன் எனப்படும் எல்கேஜி மற்றும் யுகேஜி பயிலும் குழந்தைகளுக்கு 30 நிமிடங்களுக்கு தான் ஆன்லைன் வகுப்புகள் நடத்த பட வேண்டும்.
  • ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு 2 வகுப்புகள் எடுக்க படலாம், 45 நிமிடங்களுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.
  • ஒன்பதாம் வகுப்பு முதல் பனிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு 4 வகுப்புகள் எடுக்க படலாம், அந்த வகுப்புகள் 30-45 நிமிடங்களுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.
  • பள்ளிகள் புலம் பெயர் தொழிலாளர்களின் குழந்தந்தைகளின் பெயர்களை பதிவேட்டில் இருந்து நீக்க கூடாது.
Online classes
Online classes
  • அவர்கள் குறித்த விவரங்களை அனைத்து மாநில மற்றும் யூனியன் அரசுகள் திரட்ட வேண்டும்.
  • அந்த குழந்தைகளிடம் டி சி மற்றும் முன்பு படித்த வகுப்பு சான்றிதழ் போன்ற ஆவணங்களை கேட்டு நெருக்கடியை உண்டாக்க கூடாது. சில ஆவணங்களை கொண்டு அவர்களை பள்ளிகளில் சேர்த்து கொள்ள வேண்டும்.
HRD Minister Ramesh Pokhriyal
HRD Minister Ramesh Pokhriyal

மேலும் இதனை பற்றி மனிதவள மேம்பாட்டு அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் கூறுகையில் “மாணவர்களுக்கு வீட்டிலேயே மாற்று வழியில் தரமான மற்றும் பாதுகாப்பான கல்வி வழங்கிட தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்த வழிகாட்டு நெறிமுறைகளால் ஆன்லைன் வகுப்புகளில் தரமான கல்வியை மேம்படுத்த முடியும்’’ என்று கூறினார்.

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

தமிழகத்தில் மீண்டும் பள்ளிகள் திறப்பு எப்போது? இம்முறை கோடை விடுமுறை நீடிக்குமா? வெளியான முக்கிய தகவல்!!!

தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவர்களுக்கு, கோடை விடுமுறை வழங்கப்பட்டுள்ளதால் சுற்றுலா, விளையாட்டு என கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் பள்ளிகள் திறப்பு மற்றும் தேர்வு...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -