பள்ளிகளில் பாலியல் வன்கொடுமைகளை தடுக்க புதிய வழிகாட்டு நெறிமுறைகள்… தமிழக அரசு வெளியீடு !!!

0

பள்ளிகளில் நிகழும் பாலியல் குற்றங்களை தவிர்க்க, மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய தமிழக அரசு சில வழிகாட்டுதல்கள் மற்றும் ஆன்லைன் வகுப்பிற்கான நெறிமுறைகளை வெளியிட்டது. இதில் அனைத்து மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் கண்ணியமான உடையில் வருவது, புகார் பெட்டி போன்றவை உள்ளடங்கும்.

சமீபகாலமாக பள்ளி குழந்தைகள் பாலியல் ரீதியாக மிகவும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதனை தடுக்கும் நோக்கில் தமிழக அரசு சில நெறிமுறைகளை அறிவித்து உள்ளது. அதன் படி, மாணவர்களின் பாதுகாப்பை மேற்பார்வை செய்ய ஆலோசனை குழு அமைக்கப்படும்,அந்த குழுவில் தலைமை ஆசிரியர், 2 ஆசிரியர்கள், பெற்றோர் ஆசிரியர் கழக உறுப்பினர்கள்,பள்ளி நிர்வாக உறுப்பினர் ஒருவர், ஆசிரியர் அல்லாத பணியாளர்கள் ஆகியோர் இடம்பெறுவர்.

மாணவர்களின் கருத்துகள் மற்றும் புகார்கள் அறிய பள்ளி வளாகத்தில் பாதுகாப்பு பெட்டிகள் வைக்கப்படும். இதன் வாயிலாகவோ அல்லது வாய்மொழி மூலம் பெறப்படும் புகார்கள் பதிவு செய்ய இந்த ஆலோசனை குழு தனியாக ஒரு பதிவேட்டை பராமரிக்கும்.மேலும் மாநில அளவிலான கட்டுப்பாட்டு அறை,கட்டணமில்லா தொலைபேசி எண் மின்னஞ்சல் முகவரி போன்றவை உருவாக்கப்படும். இதன் மூலம் பெறப்படும் புகார்களை மாணவர் பாதுகாப்பு ஆலோசனை குழு மாநில கட்டுப்பாட்டு அறைக்கு தெரிவிக்க வேண்டும்.

அனைத்து ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களும் ஆன்லைன் வகுப்புகளின் போது  கண்ணியமான ஆடைகளை அணிய வேண்டும்.போக்சோ சட்டத்தில் குறிப்பிட்டுள்ள பாலியல் ரீதியான குற்றங்கள் பள்ளிகளில் உள்ள அனைத்து அமைப்பினரும் அறிந்து இருக்க வேண்டும். மேலும் இது குறித்த பயிற்சிகள் வருடந்தோறும்  அளிக்க நடவடிக்கை எடுக்கப்படும். அனைத்து  இணையவழி கற்றல் கற்பித்தல் நிகழ்வுகளை பதிவு செய்து அதனை குறித்த கால இடைவெளியில் மாணவர் பாதுகாப்பு ஆலோசனைக் குழு  ஆய்வு செய்ய வேண்டும். இதை தொடர்ந்து ஆண்டுந்தோறும் நவம்பர் 15 முதல் நவம்பர் 22 வரை குழந்தைகள் துன்புறுத்தலை தடுக்கும் வாரமாக கருதி விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படும். இது போன்ற பல வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு தெரிவித்துள்ளது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here