மதுரை சித்திரை திருவிழா.., மீனாட்சி திருக்கல்யாணத்தை நேரில் பார்க்க வேண்டுமா?? ஆன்லைன் டிக்கெட் வெளியீடு!!!

0
மதுரை சித்திரை திருவிழா.., மீனாட்சி திருக்கல்யாணத்தை நேரில் பார்க்க வேண்டுமா?? ஆன்லைன் டிக்கெட் வெளியீடு!!!
உலகப் புகழ் பெற்ற மதுரை சித்திரை திருவிழா வரும் ஏப்ரல் 12ஆம் தேதி கொடியேற்றத்துடன் கோலாகலமாக துவங்க உள்ளது. இந்த திருவிழாவின் முக்கிய நிகழ்வான மீனாட்சி திருக்கல்யாணம் ஏப்ரல் 21ஆம் தேதி துவங்க உள்ளது. இந்நிலையில் இந்த திருக்கல்யாணத்தை நேரில் பார்க்க ஆர்வம் உள்ளவர்கள் மீனாட்சி அம்மன் திருக்கோயிலின் அதிகாரப்பூர்வ maduraimeenakshi.hrce.tn.gov.in என்ற இணையதளத்தில் ஏப்ரல் 9ம் தேதி முதல் 13ஆம் தேதி வரை முன்பதிவு செய்யலாம் என தெரிவித்துள்ளனர்.
மேலும் முன்பதிவுக்கான டிக்கெட் விலை 500 மற்றும் 200 ரூபாய் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதில் 500 ரூபாய் செலுத்தியவர்கள் காலை 5 மணி முதல் 7 மணி வரை வடக்கு கோபுரம் வழியாக அனுமதிக்கப்படுவார்கள். 200 டிக்கெட் பெற்றவர்கள் வடக்கு கிழக்கு சித்திரை வீதி வழியாக கோவிலுக்குள் செல்ல அனுமதிக்கப்படுவார்கள். மேலும் இந்த திருக்கல்யாணத்திற்கு மொய் வைப்பவர்கள் ஏப்ரல் 21 ஆம் தேதியிலிருந்து இணையதளங்கள் மூலம் செலுத்தலாம் எனவும் குறிப்பிட்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here