இந்தியாவில் கடந்த சில வாரங்களாக வெங்காயத்தின் விலை எக்குத்தப்பாக எகிறி காணப்பட்டது. இதனால் மக்கள் பெரிய அளவில் அவதிப்பட்ட நிலையில், தற்போது ஒரு குட் நியூஸ் வெளியாகியுள்ளது. அதாவது கடந்த அக்டோபர் 24ஆம் தேதி வெங்காயத்தின் விலை திடீரென உயர ஆரம்பித்து இரண்டு நாட்களுக்கு முன்பு கிலோ 80 ரூபாய் வரை விற்கப்பட்டு வந்தது.
Enewz Tamil WhatsApp Channel
தற்போது வெங்காயத்தின் விலை சற்று சரிய தொடங்கியுள்ளது. அதன்படி டெல்லி மார்க்கெட்டில் இன்று வெங்காயம் கிலோவுக்கு 60 ரூபாயாக குறைந்துள்ளது. இன்னும் சில நாட்களில் வெங்காயத்தின் விலை கிலோ ரூ. 50 வரை குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.