Tuesday, April 16, 2024

மிரள வைக்கும் வெங்காய விலை – பசுமை பண்ணைகளில் 45 ரூபாய்க்கு விற்பனை!!

Must Read

சமையலில் மிக அத்தியாவசியமான பொருளாக பார்க்கப்படும் வெங்காய விலை தற்போது பருவமழை மற்றும் குறைவான வரத்து காரணமாக அதிகமான விலையில் விற்கப்படுகிறது.

அத்தியாவசிய பொருள்:

வெங்காயம் சமையலில் அதிமாக பயன்படுத்தப்படும் ஒரு உணவுப்பொருள் ஆகும். கடந்த சில நாட்களாக வெங்காய விலை அதிரடியாக உயர்வினை சந்தித்து வருகின்றது. தமிழகத்திற்கு எப்போதும் பெரிய வெங்காயம் மத்திய பிரதேசம், மகாராஷ்டிரா, தெலுங்கானா ஆந்திர பிரதேசம் போன்ற மாநிலங்களில் இருந்து தான் வருகின்றது. ஆனால், பருவமழை காரணமாக மற்ற மாநிலங்களில் இருந்து வரும் வெங்காயத்தின் வரத்து குறைந்தது.

உடனுக்குடன் அப்டேட்களை பெற Enewz சமூக வலைதள பக்கங்களில் இணையுங்கள்!!

அதனால், தமிழகத்திற்கு வெறும் 400 டன் மட்டுமே வரத்து வருகின்றது. இதன் காரணமாக வெங்காயத்தின் விலை அதிரடியாக உயர்ந்து வந்துள்ளது. ஒரு கிலோ வெங்காயம் 40 ரூபாய்க்கு மட்டுமே அனைத்து கடைகளிலும் விற்பனை செய்யப்பட்டது. ஆனால், வரத்து குறைந்ததால் வெங்காய விலை தற்போது 100 ரூபாய் என்று விற்பனை செய்யப்படுகிறது.

பசுமை பண்ணைகளில் விலை நிலவரம்:

இதனை தடுக்கும் பொருட்டு தமிழக அரசு பசுமை பண்ணைகளில் ஒரு கிலோ வெங்காயம் 45 ரூபாய்க்கு விற்கப்படும் என்று தெரிவித்துள்ளது. இந்த திட்டத்தினை நேற்று அமைச்சர் செல்லூர் ராஜு சென்னையில் துவக்கி வைத்தார். இது தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களுக்கும் விரைவாக விரிவுபடுத்தப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

‘ஒத்த செருப்பு’ மற்றும் ‘ஹவுஸ் ஓனர்’ திரைப்படங்களுக்கு மத்திய அரசு விருது!!

வெங்காய பற்றாக்குறையினை தடுக்க எகிப்த் நாட்டில் இருந்து 135 டன் வெங்காயம் சென்னைக்கு வரவழைக்கப்பட்டது. அதில் தற்போது 80 சதவீத வெங்காயங்கள் தீர்ந்து விட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

மதுபிரியர்களே., தேர்தல் நடத்தை விதிமுறையால் இத்தனை பாட்டில்கள் தான் அனுமதி., வெளியான முக்கிய தகவல்!!!

நாடு முழுவதும் மக்களவை தேர்தல் வரும் 19 முதல் ஜூன் 1ஆம் தேதி வரை ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதன்...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -