வெங்காயம், உருளைக்கிழங்கு அத்தியாவசிய பொருட்களில் இருந்து நீக்கம் – நாடாளுமன்றத்தில் மசோதா நிறைவேற்றம்!!

0

இன்று நடைபெற்ற மழைக்கால நாடாளுமன்ற கூட்டத்தொடரில் அத்தியாவசிய பொருட்களின் பட்டியலில் இருந்து தானியங்கள், பருப்பு வகைகள், சமையல் எண்ணெய்கள், வெங்காயம் மற்றும் உருளைக்கிழங்கு ஆகியவற்றை அகற்றும் மசோதாவை நாடாளுமன்றம் நிறைவேற்றி உள்ளது. இதனால் வேளாண் துறையில் மாற்றங்கள் ஏற்பட்டு விவசாயிகளின் வருமானம் உயரும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

நாடாளுமன்ற கூட்டத்தொடர்:

செப்டம்பர் 15 ம் தேதி (திங்கட்கிழமை) நடைபெற்ற கூட்டத்தொடரில் கொண்டு வரப்பட்ட அத்தியாவசிய பொருட்கள் சட்டத்திருத்த மசோதாவுக்கு மாநிலங்களவையில் குரல் வாக்கெடுப்பு மூலம் ஒப்புதல் அளிக்கப்பட்டது. 1955ம் ஆண்டு கொண்டு வரப்பட்ட இச்சட்டத்தில் மாற்றம் செய்யப்பட்டதன் மூலம் விவசாயிகளுக்கு வருமானம் அதிகரிக்கும். மேலும் தானியங்கள், பருப்பு வகைகள், எண்ணெய் வித்துக்கள், சமையல் எண்ணெய்கள், வெங்காயம் மற்றும் உருளைக்கிழங்கு போன்றவற்றின் உற்பத்தி, விநியோகம் மற்றும் இருப்பு வைப்பதில் எவ்வித கட்டுப்பாடுகளும் இருக்காது.

ENEWZ – சமூக வலைதள பக்கங்களில் சேர கிளிக் பண்ணுங்க!!

இதனால் வேளாண் துறையில் அரசு நிறுவனங்களின் அதிகப்படியான நடவடிக்கைகள் இருக்கும் என்ற அச்சமின்றி தனியார் நிறுவனங்கள் அதிகளவில் முதலீடுகள் செய்ய வாய்ப்பு ஏற்படும். வெளிநாட்டு நேரடி முதலீட்டை விவசாயத் துறையில் ஈர்ப்பதற்கும் இது வழிவகுக்கும் என மத்திய அரசு தெரிவித்து உள்ளது.

இந்திய கடற்படையில் பெண்கள் நியமனம் – வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வு!!

வேளாண் சட்டத்திருத்த மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்த 8 எதிர்க்கட்சி எம்.பி.,க்கள் கூட்டத்தொடரில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டு உள்ளதை எதிர்த்து பிற எம்.பி.,க்கள் இன்று வெளிநடப்பு செய்தனர். இதனால் எதிர்க்கட்சியினர் இல்லாமையே இன்று நாடாளுமன்ற கூட்டம் நடைபெற்றது. இதனால் குரல் வாக்கெடுப்பு மூலம் சட்டத்திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டு உள்ளது. இதற்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்த உடன் சட்டமாக்கப்படும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here