இந்தியாவில் முதன்முதலில் ஊரடங்கு போடப்பட்ட நாள் இன்று – மெமோரிஸ் பிரிங் பேக்!!

0

கடந்த ஆண்டு இதே தினத்தில் தான் நாட்டின் சோகமான தினம் தொடங்கியது. அது என்னவென்றால் ஊரடங்கு உத்தரவு என்னும் ஓர் நிகழ்வு கடந்த ஆண்டு இதே தினத்தில் தான் துவங்கியது.

ஊரடங்கு உத்தரவு:

உலகம் முழுவதும் தற்போது அச்சுறுத்தி பாதித்து வரும் கொரோனா வைரஸ் கடந்த ஆண்டு சீன நாட்டில் இருந்து பரவ தொடங்கியது, சுமார் ஒரு ஆண்டு காலமாகியும் இந்த கொரோனா வைரஸ் எந்த உலக நாட்டிலும் முழுவதுமாக குணமாகவில்லை. மேலும் சில இடங்களில் உருமாறிய கொரோனா மற்றும் சில பகுதிகளில் கொரோனாவின் இரண்டாவது அலை என இன்னும் மக்களை துன்புறுத்தி தான் வருகிறது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

கடந்த ஆண்டு இது போல் தான் மார்ச் மாதத்தில் இந்தியாவில் கொரோனா தொற்று அதிகரிப்புக்கான நிலை ஏற்பட்டது. இதனால் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கும் நிலை இந்தியாவில் ஏற்பட்டது. இதற்கு சான்றாக இந்தியா முழுவதும் இதே மார்ச் 22ம் தேதி அன்று ஒரு நாள் மட்டும் காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்படும் என்று நாட்டின் பிரதமர் மோடி கடந்த ஆண்டு மார்ச் மாதம் 19ம் தேதி மக்களிடம் தெரிவித்தார்.

one year of lockdown

மீண்டும் ஊரடங்கிற்கு வாய்ப்புள்ளதா?? மத்திய அமைச்சர் விளக்கம்!!

இந்த நிகழ்வு நடந்து சுமார் ஒரு ஆண்டு காலம் ஆகிவிட்டது. ஆனால் இன்னும் இந்தியாவில் இருந்து கொரோனா முழுவதும் நீங்கவில்லை. சொல்ல போனால் தற்போது மீண்டும் இந்தியாவில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கும் நிலை தான் ஏற்பட்டுள்ளது. இதனை தவிர்க்க வேண்டும் என்றால் மக்கள் அனைவரும் தக்க கொரோனா தடுப்பு பாதுகாப்பு நடவடிக்கைகளை பின்பற்ற வேண்டும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here