ஒரு ரூபாயில் புடவையா.., மாவட்டத்தில் அரங்கேறிய சம்பவம்.., இனி எவனும் ஆஃபர் போட மாட்டான்!!

0
ஒரு ரூபாயில் புடவையா.., மாவட்டத்தில் அரங்கேறிய சம்பவம்.., இனி எவனும் ஆஃபர் போட மாட்டான்!!

கிருஷ்ணகிரியில் பிரபல ஜவுளி கடையின் முதலாம் ஆண்டு நிறைவு தினத்தை முன்னிட்டு, ஒரு ரூபாய்க்கு புடவை வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஒரு ரூபாய்க்கு புடவை:

தமிழகத்தில் வாழும் ஒவ்வொரு பொண்ணுக்கும் புடவையின் மீது அதிக நாட்டம் இருப்பது மாறாத ஒன்று. அதுவும் எந்த மாதிரி கலர், எந்த மாதிரியான டிசைன் என்று பார்த்து பார்த்து வாங்குவதில் பெண்களை அடித்துக் கொள்ள எவராலும் முடியாது. இதனை தொடர்ந்து ஆடி ஆஃபர், தீபாவளி ஆஃபர் வந்தால் போதும் ஜவுளி கடையில் கூட்டம் அலை மோதும்.

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

இந்நிலையில் கிருஷ்ணகிரியில் பிரபல ஜவுளி கடை வெளியிட்ட ஒரு அறிக்கை அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அமைந்துள்ள ஸ்ரீ வெங்கடேஸ்வரா சில்க்ஸ் என்ற பிரபல ஜவுளி கடை, திறந்து ஒரு வருடங்கள் ஆகியுள்ளதால், அந்த நாளை சிறப்பாக கொண்டாட வேண்டும் என்று கடை நிறுவனம் கடைக்கு முதலில் வரும் 500 வாடிக்கையாளர்களுக்கு ஒரு ரூபாய்க்கு புடவை வழங்கப்படும் என அறிவித்திருந்தது.

இந்த தகவலை அறிந்த பொதுமக்கள் திடீரென கடையின் வாசல் முன் திரண்டனர். இந்த கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல் அப்பகுதியில் பெரும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அதன் பின்னர் அனைவரும் புடவைகளை வாங்கி சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது பதற்றம் ஏற்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here