இந்தியாவில் குரங்கு அம்மையால் நேர்ந்த முதல் பலி – வெளியான திடுக்கிடும் தகவல்!

0
இந்தியாவில் குரங்கு அம்மையால் நேர்ந்த முதல் பலி - வெளியான திடுக்கிடும் தகவல்!

இந்தியாவில் 4 நபர்களுக்கு குரங்கு அம்மை நோய் அறிகுறிகள் கண்டறியப்பட்டு பரிசோதனை செய்து சிகிச்சை பெற்று வரும் நிலையில் ஒரு நபர் உயிரிழந்துள்ளதாக உறுதி செய்யப்பட்டுள்ளது.

குரங்கு அம்மையால் முதல் பலி:

இன்றைய சூழ்நிலையில் குரங்கு அம்மை நோய் பரவுவது மக்களிடையே மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவிலும் இந்நோய் பரவி வருவது குறிப்பிடத்தக்கது. இதனை தொடர்ந்து நோய் பரவாமல் இருக்க அனைத்து மாநில அரசுகளும் முன்னெச்சரிக்கையுடன் மக்களை கண்காணித்து வருகின்றனர். தற்போது இந்நோயால் கேரளாவில் ஒரு நபர் உயிர் இறந்துள்ளதாக சுகாதாரத்துறை உறுதிப்படுத்தியுள்ளது.

அதாவது, கடந்த ஜூலை 21ம் தேதி ஐக்கிய அரபு நாட்டில் இருந்து கேரளாவிற்கு வந்த 22 வயதுடைய இளைஞருக்கு குரங்கு அம்மை தொற்று அறிகுறிகள் தென்பட்டுள்ளது. அவர் தீவிர சிகிச்சை பெற்று வந்த நிலையில் தற்போது உயிரிழந்துள்ளதாக கேரள சுகாதாரத்துறை உறுதிப்படுத்தியுள்ளது. இதன் மூலம் இந்தியாவில் இந்த குரங்கு அம்மை நோயால் பலியானவர்களின் எண்ணிக்கை ஒன்றாக உயர்ந்துள்ளது. இதனால் இந்த உயிர் இழப்பு சம்பவத்தால் மக்கள் பெரும் அச்சத்தை அடைந்துள்ளனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here