ஒரு நாள் சம்பளத்தைக் கொடுக்கும் அரசு ஊழியர்கள்..! தமிழக அரசு அரசாணை  வெளியிடு !!

0

முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு அரசு ஊழியர்களின் ஒருநாள் சம்பளத்தை வழங்குவதற்கான அரசாணையை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டது தமிழ் நாடு மாநில அரசு.

ENEWZ  WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

நாட்டில் பரவி வரும் கொடிய கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து தமிழக மக்களை காப்பாற்ற அரசுக்கு உதவ முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மக்களுக்கு வேண்டுகோள் விடுத்தார்.தமிழக அரசு எடுத்து வரும் நடவடிக்கைகளுக்கு ஆதரவு அளிக்கும் வகையில், அரசு அலுவலகர்கள், பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஒரு நாள் ஊதியத்தினை தமிழக முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு வழங்க விருப்பம் தெரிவித்தனர்.

  

இதனடிப்படையில் தமிழ் நாடு அரசு அரசாணை பிறப்பித்துள்ளது.அரசு உதவி மற்றும் மானியம் பெறும் நிறுவனங்களின் பணியாளர்களுக்கும் இது பொருந்தும். தொகுப்பூதியம் பெறும் பணியாளர்களுக்கும் இந்த அரசாணை பொருந்தும்.ஏற்கனவே பல்வேறு  அரசியல் தலைவர்கள் பொதுமக்கள், நிறுவன உரிமயாளர்கள் நிதிகளை வழங்கியுள்ளனர். மேலும், நிதிகள் வழங்கப்பட்டு வருகிறது.

அந்த அரசாணையில் முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு தங்களது ஒரு நாள் சம்பளத்தை அளிக்க விரும்பும் அலுவலர்கள், பணியாளர்கள், ஆசிரியர்கள், அதற்கான தங்களது விருப்பத்தைச் சம்பந்தப்பட்ட சம்பளம் பெற்று வழங்கும் அலுவலருக்கு எழுத்துபூர்வமாக அளிக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

Facebook   => Like செய்ய கிளிக் பண்ணுங்க!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here