“12 ரூபாய் டீ-க்கு ஒரு கிலோ தக்காளி இலவசம்”…, கடைக்காரர் கொடுத்த அதிரடி சலுகை!!

0
"12 ரூபாய் டீ-க்கு ஒரு கிலோ தக்காளி இலவசம்"..., கடைக்காரர் கொடுத்த அதிரடி சலுகை!!

இந்தியாவில், கடந்த சில வாரங்களாக தக்காளியின் விலை தாறுமாறாக உயர்ந்து வருகிறது. அதாவது, ஒரு கிலோ தக்காளியின் விலை ரூ. 200, ரூ. 180, ரூ. 160, ரூ. 140 என நாளுக்கு நாள் ஏற்ற இறக்கத்துடன் நிர்ணயம் செய்யப்பட்டு வருகிறது. இதனால், பொதுமக்கள் அனைவரும் நாளுக்கு நாள் ஏறி இறங்கும் தங்கத்தின் விலையுடன் தக்காளி விலையையும் அன்றாடம் உற்று கவனித்து வருகின்றனர். இவ்வளவு தட்டுப்பாடு உள்ள இந்த தக்காளியை, இலவசமாக வழங்கினால் பொதுமக்கள் விட்டு வைப்பார்களா? என்ன.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

அதாவது, சென்னையின் கொளத்தூர் கணபதி ராவ் நகரில் உள்ள டீக்கடைக்காரர் ஒருவர், ஒரு டீ ரூ.12க்கு வாங்கினால் ஒரு கிலோ தக்காளி இலவசம் என அறிவித்திருந்தார். இதனை அறிந்த உடன் பொதுமக்கள் கூட்டம் அலைமோதி உள்ளது. ஆனால், கடைக்காரர் முன்னெச்சரிக்கையாக போலீஸ் பாதுகாப்பை ஏற்படுத்திக் கொண்டதுடன், முதலில் வரும் 100 நபர்களுக்கு மட்டுமே இந்த சலுகை என அறிவித்தார். இதையடுத்து, முதலில் வந்த 100 நபர்கள் ரூ. 12 க்கு டீ குடித்துவிட்டு ஒரு கிலோ தக்காளியும் வாங்கி சென்றுள்ளனர்.

மக்களே ஜாக்கிரதை.., வங்க தேசத்தில் நாளுக்கு நாள் டெங்கு பலி அதிகரிப்பு.., பீதியில் பொதுமக்கள்!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here