சர்வதேச கிரிக்கெட் அணிகள் அனைத்தும் எதிர்வரும் உலக கோப்பையை மையமாக கொண்டு தீவிரமாக பயிற்சி செய்து வருகின்றனர். இதே நாளில் (செப்டம்பர் 14) தான் கடந்த 2007 ஆம் ஆண்டு டி20 உலக கோப்பைக்கான முதல் போட்டியில் இந்திய அணி தோனி தலைமையில் முதன் முறையாக களமிறங்கியது. பாகிஸ்தான் அணிக்கு எதிராக நடத்த போட்டியில், இரு அணிகளும் 20 ஓவர் முடிவில் 147 ரன்கள் எடுக்க போட்டியானது டிரா ஆனது. இதையடுத்து, பவுல்-அவுட் முறை கடைபிடிக்கப்பட்டது.
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
அதாவது, விக்கெட் கீப்பர் மட்டும் ஸ்டெம்ப் பின் நிற்க பேட்ஸ்மேனின்றி பவுலர் தனது பந்து வீச்சால் ஸ்டாம்ப்பை சிதறடிக்க வேண்டும். இதில், இந்தியாவின் ஹர்பஜன் சிங், ராபின் உத்தப்பா உள்ளிட்டோர் தொடர்ந்து 3 முறை ஸ்டாம்ப்பை சிதறடிக்க, பாகிஸ்தான் வீரர்கள் 3 வாய்ப்பையும் தவற விட்டனர். இதனால், பவுல்-அவுட் முறையில் இந்திய அணி அபார வெற்றி பெற்றதுடன் இந்த 2007 ஆம் ஆண்டுக்கான டி20 உலகக் கோப்பையையும் வென்று அசத்தியது. இதனை தொடர்ந்து, தோனி தலைமையில் இந்திய அணி, 2010 ஆசிய கோப்பை, 2011 ஒருநாள் உலக கோப்பை, 2013 ல் சாம்பியன்ஸ் டிராபி என வென்று வரலாறு படைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இறுதிப் போட்டியில் இந்தியாவுடன் மோத போவது யார்? கடைசி யுத்தத்தில் பாகிஸ்தான் & இலங்கை!“
India beat Pakistan in the Bowl-out "On this day in 2007" in the T20 World Cup 2007.
This marks the beginning of MS Dhoni's Era as a captain in cricket history. pic.twitter.com/Xe8NQzHI3g
— Johns. (@CricCrazyJohns) September 14, 2023