தமிழகத்தில் ஆம்னி பேருந்து கட்டண உயர்வு.,, அமைச்சர் சிவசங்கர் அறிவுரை!!

0
தமிழகத்தில் ஆம்னி பேருந்து கட்டண உயர்வு.,, அமைச்சர் சிவசங்கர் அறிவுரை!!
தமிழகத்தில் ஆம்னி பேருந்து கட்டண உயர்வு.,, அமைச்சர் சிவசங்கர் அறிவுரை!!

தமிழகத்தில் ஆம்னி பேருந்துகளின் கட்டணம் அதிரடியாக உயர்த்தப்பட்ட நிலையில், இன்று ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் மற்றும் சங்க நிர்வாகிகளை போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் சந்தித்து பேசினார்.

கட்டண உயர்வு:

தமிழகத்தில் தீபாவளி, பொங்கல் போன்ற விடுமுறை நாட்களில் சொந்த ஊர் செல்லும் மக்களுக்கு ஏதுவாக அரசு போக்குவரத்து துறை சிறப்பு பஸ்களை இயக்கினாலும், பற்றாக்குறை காரணமாக, பொதுமக்கள் தனியார் பேருந்துகளை நாட வேண்டிய சூழல் ஏற்படுகிறது. இந்த நிலையை பயன்படுத்தி கொண்டு தனியார் பேருந்துகளும் டிக்கெட் விலையை எக்கச்சக்கமாக உயர்த்தி கொள்ளையடிப்பது வழக்கமாகிவிட்டது
இந்நிலையில் அடுத்த மாதம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தொடர்ந்து விடுமுறைகள் வர உள்ளன.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இதை காரணமாக வைத்து சென்னையில் இருந்து மற்ற ஊர்களுக்கு செல்வதற்கான ஆம்னி பேருந்துகளின் டிக்கெட் விலை 4500 ரூபாய் வரை உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் புகார் தெரிவித்த நிலையில், ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கத்துடன், போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் பேச்சுவார்த்தை இன்று நடத்தினார்.

தமிழக பள்ளி ஆசிரியர்களின் ஓய்வு வயதில் அதிரடி மாற்றம் – கல்வித்துறை வெளியிட்ட முக்கிய சுற்றறிக்கை!!

அப்போது செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர், ஆம்னி பேருந்துகள் கட்டணத்தை முறைப்படுத்துவது தொடர்பாக ஆலோசனை நடத்தப்பட்டது. இரண்டு நாளில் கட்டணம் குறித்த முடிவை அரசிடம் தெரிவிப்பதாக சொல்லியுள்ளனர்.மேலும் நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை விட கூடுதல் கட்டணம் வசூலிக்கக் கூடாது என ஆம்னி பேருந்து உரிமையாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது எனத் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here