இப்போதைக்கு முக்கியம் வாழ்க்கை தான்…கொண்டாட்டங்கள் அல்ல – உலக சுகாதார அமைப்பு வேண்டுகோள்!!

0

உலகம் முழுவதும் பரவி வரும் ஓமைக்ரான் வைரஸ் காரணமாக பண்டிகைகள் கொண்டாடுவதை விட, உயிருடன் இருப்பது மிக முக்கியம் என உலக சுகாதார அமைப்பின் தலைமை விஞ்ஞானி தெரிவித்துள்ளார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

விஞ்ஞானி எச்சரிக்கை :

உலகம் முழுவதும், தற்போது கொரோனாவில் உருமாறிய வைரஸான ஓமைக்ரான் தீவிரமாக பரவி வருகிறது. இந்த வைரஸ் தடுப்பூசி போட்டவர்களையும், ஏற்கனவே வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களையும் இந்த வைரஸ் தாக்குவதாக உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோ அதனோம் தெரிவித்தார். இந்த நிலையில் தற்போது தொடர்ந்து கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு நிகழ்ச்சிகள் வருவதால், மக்கள் கூட்டமாக கூட ஆரம்பித்துள்ளனர்.

இதையடுத்து தொற்று பரவல் அதிகரிக்க வாய்ப்புகள் உள்ளது. இப்போது கொண்டாட்டங்களில் ஈடுபடுவதை விட, மனிதர்களின் வாழ்க்கை மிகவும் முக்கியம், எனவே கொண்டாட்டங்களை இப்போதைக்கு தள்ளி வையுங்கள் என்று உலக சுகாதார அமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது. இதுமட்டுமில்லாமல் ஓமைக்ரான் வைரஸை லேசாக எடை போட்டு விடாதீர்கள் என்று உலக சுகாதார அமைப்பின் தலைமை விஞ்ஞானி சவுமியா சுவாமிநாதன் தெரிவித்துள்ளார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here