ஓமைக்ரான் வைரஸை தீவிரமாக எதிர்ப்பது இந்த தடுப்பூசி தான் – அமெரிக்கா வெளியிட்ட புதிய ஆய்வு முடிவு!!

0

வைரஸ் பரவலை கட்டுப்படுத்த, மக்களுக்கு செலுத்தப்பட்டு வரும் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி ஓமைக்ரான் வைரஸுக்கு எதிராக போராடுவதாக, அமெரிக்க ஆய்வு முடிவுகள் தெரிவித்துள்ளது.

 முடிவுகள் வெளியீடு:

உலகம் முழுவதும் பரவி வரும் கொரோனா வைரஸை கட்டுப்படுத்த, மக்களுக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகிறது. இரண்டு தவணைகளாக செலுத்தப்பட்டு வரும் தடுப்பூசிகள், ஓரளவுக்கு பலனைத் தந்தாலும், தற்போது பரவி வரும் ஓமைக்ரான் வைரஸுக்கு எதிராக இந்தத் தடுப்பூசிகள் போராடவில்லை. இதனால், 2 டேஸ் செலுத்தியவர்களுக்கு பூஸ்டர் டோஸ் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இதுவரை கோவிஷில்டு, கோவாக்சின் மற்றும் ஸ்புட்னிக் வி  உள்ளிட்ட தடுப்பூசிகள் இந்தியாவில் போடப்படுகிறது.

இந்த நிலையில், அமெரிக்காவில் நடத்தப்பட்ட ஆய்வு முடிவில், பூஸ்டர் டோஸ் தடுப்பூசிகள் செலுத்தியவர்களில் 67% நபர்களுக்கு ஓமைக்ரானை எதிர்க்கும் சக்தி உடலில் தோன்றியுள்ளதாக முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது. பைசர் மற்றும் மாடர்னா பூஸ்டர் தடுப்பூசிக்கு பின், வைரஸை எதிர்க்கும் சக்திகள் உடலில் உருவாகியுள்ளதாக இந்த ஆய்வு முடிவு வெளியிடப்பட்டுள்ளது. இதனால் பூஸ்டர் டோஸ் தடுப்பு ஊசி செலுத்தி கொள்ள மக்கள்  ஆர்வம் காட்டி வருகின்றனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here