இவங்களை மட்டும் தான் ஓமைக்ரான் அதிகமாக தாக்கும் – உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை!!

0

உலகம் முழுவதும் உருமாறிய ஓமைக்ரான் வைரஸ் தீவிரமாக பரவி வரும் இந்த சூழ்நிலையில், மக்கள் அனைவரும் கட்டாயம் தடுப்பூசி செலுத்தி கொள்ள வேண்டும் என  உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது.

சுகாதார நிறுவனம் எச்சரிக்கை:

உலகம் முழுவதும் டெல்டா வைரஸ் மற்றும் உருமாறிய ஓமைக்ரான் வைரஸ் தீவிரமாக பரவி வருகிறது. இந்த தொடர் பரவலை தடுக்க மக்களுக்கு தடுப்பூசி செலுத்துவதை அந்தந்த நாட்டு அரசுகள் முனைப்புடன் செயல்படுத்தி வருகின்றன. இந்தியாவில், தற்போது 3ம் அலை தொடங்கி பரவி வருவதாக உலக சுகாதார அமைப்பு அண்மையில் எச்சரித்திருந்தது. இதனால், இந்தியா முழுவதும் 15 முதல் 18 வயது வரை உள்ள சிறார்களுக்கும், வயதானவர்கள் மற்றும் இணை நோய் உள்ளவர்களுக்கு பூஸ்டர் டோஸ் தடுப்பு ஊசியும் செலுத்தப்பட்டு வருகிறது.

பல மாநிலங்களில் ஓமைக்ரான் வைரஸ் மிக தீவிரமாக பரவி வருகிறது. இது குறித்து எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ள சுகாதார அமைப்பு, கொரோனா தடுப்பூசி செலுத்தி கொள்ளாதவர்களுக்கு இந்த ஓமைக்ரான் வைரஸ் மிகவும் மோசமான ஆபத்தை விளைவிக்கும் என எச்சரித்துள்ளனர். இதனால் மக்கள் அனைவரும் விரைந்து தடுப்பூசி எடுத்துக் கொள்ள வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here