ஒலிம்பிக் போட்டி 2021: குத்துச்சண்டை போட்டியில் இந்திய வீராங்கனை லவ்லினா படைத்த சாதனை!!

0

2020 ஆம் ஆண்டு நடைபெறவிருந்த ஒலிம்பிக் போட்டிகள் கொரோனா தொற்று காரணமாக ஒத்திவைக்கப்பட்டது. தற்போது இந்த போட்டிகள் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் ஜப்பான் தலைநகர் டோக்கியோவில்  நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் இன்று நடைபெற்ற பெண்கள் குத்துச்சண்டை அரையிறுதி போட்டியில் இந்தியாவை சேர்ந்த லவ்லினா போர்கோஹெய்னும் துருக்கி நாட்டை சேர்ந்த Busenaz Sürmeneli உடன் மோதினர். மிக விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் Busenaz Sürmeneli 5-0 என்ற கணக்கில் லல்லினாவை வீழ்த்தியுள்ளார்.

 

இதன் மூலம் இந்திய வீராங்கனை லவ்லினா போர்கோஹெய்ன் வெண்கல பதக்கத்தை பெற்றுள்ளார். லவ்லினாவிற்கு முன்னதாக விஜேந்தர் சிங்க் 2008 ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டியிலும், மேரி கோம் 2012 ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டியிலும் வெண்கல பதக்கம் வென்றுள்ளனர்.

தற்போது இவர்களின் வரிசையில் லவ்லினா போர்கோஹெய்னும் இணைந்து சாதனை படைத்துள்ளார். தற்போது வரை இந்தியா டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளில் 1 வெள்ளி பதக்கத்தையும், 2 வெண்கல பதங்கங்களையும் பெற்றுள்ளது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here