ஹாக்கி அரையிறுதியில் இந்தியா தோல்வி: வெற்றி, தோல்வி வாழ்க்கையின் ஒரு பகுதி – பிரதமர் மோடி ட்விட்!!

0

பெல்ஜியத்திற்கு எதிரான ஹாக்கி அரையிறுதியில் இந்தியா தோல்வியடைத்ததை அடுத்து பிரதமர் மோடி இந்திய அணிக்கு தனது ட்விட்டர் பதிவின் மூலம் ஆறுதல் கூறியுள்ளார்.

2020 ஆம் நடக்க வேண்டிய 32 வது ஒலிம்பிக் போட்டிகள் கொரோனா தொற்று காரணமாக ஒத்திவைக்கப்பட்டது. தற்போது இந்த போட்டிகள் ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடத்தப்பட்டு வருகிறது. ஜூலை 23 ஆம் தேதி தொடங்கப்பட்ட இந்த போட்டிகள் 8 ஆகஸ்ட் வரை நடைபெறும்.

இன்று (ஆகஸ்ட் 3, 2021) ஹாக்கி ஆண்கள் அரையிறுதி ஆட்டத்தில் இந்தியா தோல்வியை சந்திக்காத பெல்ஜியம் அணியை எதிர்கொண்டது. இந்த ஆட்டத்தின் முடிவில் பெல்ஜியம் அணி 5-2 என்ற கோல் கணக்கில் இந்தியாவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

எனவே போராடி தோல்வியடைந்த இந்திய அணியை ஊக்கப்படுத்தும் வகையில் பிரதமர் மோடி தன் ட்விட்டர் பக்கத்தில், “வெற்றி தோல்வி வாழ்க்கையில் ஒரு பகுதி. இப்போட்டியில் இந்திய அணி தங்களால் முடிந்ததை வழங்கியது. இந்திய நாடு தனது வீரர்களை நினைத்து பெருமை படுகிறது” இவ்வாறு தனது ட்விட்டின் மூலம் ஆறுதல் தெரிவித்துள்ளார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here