திறமையின் மூலம் இடம் பிடித்த விஜய் குமார் – இதிலும் பதக்க கனவு நினைவாகுமா?

0
திறமையின் மூலம் இடம் பிடித்த விஜய் குமார் - இதிலும் பதக்க கனவு நினைவாகுமா?
திறமையின் மூலம் இடம் பிடித்த விஜய் குமார் - இதிலும் பதக்க கனவு நினைவாகுமா?

ஒலிம்பிக் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற விஜய் குமார், வரும் ISSF உலக சாம்பியன்ஷிப் போட்டிக்கான இந்திய அணியில் இடம் பிடித்துள்ளார்.

வெள்ளிப் பதக்கம் வென்ற விஜய் குமார்!

வரும் அக்டோபர் 12 முதல் 25 வரை எகிப்து தலைநகர் கெய்ரோவில் ISSF உலக சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற உள்ளது. இதனால் இதில் கலந்து கொள்ளும் இந்திய வீரர்களுக்கான தகுதி சுற்று ஆட்டம் நடைபெற்றது. அதன் படி இந்தப் போட்டிக்கான 48 பேர் கொண்ட இந்திய துப்பாக்கி மற்றும் பிஸ்டல் அணியை இந்திய தேசிய ரைபிள் சங்கம் (NRI) நேற்று அறிவித்தது. இந்த அணியில் ஒலிம்பிக்கில் வெள்ளி பதக்கம் வென்ற பிஸ்டல் துப்பாக்கி சுடும் வீரர் விஜய் குமார் இடம்பிடித்துள்ளார்.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

இவர் கடைசி சர்வதேச போட்டிக்குப் பிறகு நான்கு ஆண்டுகள் கழித்து, இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் தேசிய அணிக்கு திரும்பினார். ஏனென்றால் கடந்த 2012 ஒலிம்பிக்கில் 25 மீட்டர் ரேபிட் ஃபயர் பிஸ்டல் பிரிவில் இரண்டாவது இடத்தைப் பிடித்த குமார், தோள்பட்டையில் ஏற்பட்ட பலத்த காயம் காரணமாக ஓய்வு எடுத்தார். மேலும் இவர் காமன்வெல்த் தொடரில் ஐந்து முறை தங்க பதக்கத்தை துப்பாக்கி சுடுதல் போட்டியில் தனதாக்கிக்கொண்டார். இந்நிலையில் இவர் இந்த ஆண்டு ISSF உலக சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கப் பதக்கம் வெல்வார் என எதிர்பார்க்க படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here