அரசு ஊழியர்களே கவனம்., பழைய ஓய்வூதியத்திற்கு மாற கடைசி சான்ஸ்! மனமிறங்கிய மத்திய அரசு!!

0
அரசு ஊழியர்களே கவனம்., பழைய ஓய்வூதியத்திற்கு மாற கடைசி சான்ஸ்! மனமிறங்கிய மத்திய அரசு!!
அரசு ஊழியர்களே கவனம்., பழைய ஓய்வூதியத்திற்கு மாற கடைசி சான்ஸ்! மனமிறங்கிய மத்திய அரசு!!

மத்திய அரசு ஊழியர்கள் இறுதி வாய்ப்பாக, பழைய ஓய்வூதிய திட்டத்திற்கு திரும்புவது குறித்து முடிவெடுக்க கடைசி வாய்ப்பை வழங்குவதாக, ஓய்வூதிய நலத் துறை செயலாளர் அறிவித்துள்ளார்.

வெளியான அறிவிப்பு:

அரசு ஊழியர்களுக்கு ஏற்கனவே நடைமுறையில் இருந்த பழைய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்துவிட்டு, பங்களிப்பு பென்ஷன் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதாக 2004 ஆம் ஆண்டு மத்திய அரசு அறிவித்தது. பல மாநில ஊழியர்கள் இத்திட்டத்தை திரும்ப பெற வேண்டும் என போராட்டம் நடத்தி வருகின்றனர். தற்போது, பல மாநில அரசுகள் மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தை அறிவித்துள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இது போக தமிழகம், கர்நாடகா உள்ளிட்ட ஒரு சில மாநிலங்கள் பழைய ஓய்வூதிய திட்டத்திற்கு திரும்புவது குறித்து ஆராய, கூடுதல் தலைமைச் செயலாளரின் தலைமையில் ஒரு குழுவை அமைத்துள்ளது. இதையடுத்து, மத்திய அரசு ஊழியர்களுக்கு கடைசி வாய்ப்பாக எந்த ஓய்வூதியத்தில் பயன்பெற விரும்புகிறார்களோ? அதை தேர்வு செய்ய வேண்டும் என ஓய்வூதியம் பெறுவோர் நலத்துறை கூடுதல் செயலாளர் சஞ்சீவ் நரேன் அறிவித்துள்ளார்.

ரேஷன் கார்டு பெற புதிய நடைமுறைகள்., அரசின் நடவடிக்கையால் குழப்பத்தில் பொதுமக்கள்!!

ஆனால் இந்த முடிவு என்பது நிரந்தரமானதாக இருக்க வேண்டும் எனவும், அதன் பிறகு இதில் எந்த மாற்றமும் இருக்காது எனவும் தெரிவித்தார். இதனால் அரசு ஊழியர்கள், உச்சகட்ட குழப்பத்தில் இருந்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here