இந்த ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டம் அமல்?? அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!!!!

0
இந்த ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டம் அமல்?? அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!!!!
இந்த ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டம் அமல்?? அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!!!!

நாடு முழுவதும் அனைத்து அரசு ஊழியர்களும் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த கோரி அரசுக்கு கோரிக்கைகள் முன் வைத்து வருகின்றனர். அந்த வகையில் கடந்த 2003 ஆம் ஆண்டு பழைய ஓய்வூதிய திட்டம் அமலில் இருக்கும் போது 8431 ஆண் காவலர்களும், சில பெண் காவலர்களும் பணியில் இணைத்தனர்.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இதில் பெண் காவலர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தின் படி ஊதியம் வழங்கப்பட்ட நிலையில், 8431 ஆண் காவலர்களுக்கு புதிய ஓய்வூதியத்தின் படி சம்பளம் வழங்கப்பட்டது. இந்நிலையில் 2003 ஆம் ஆண்டு பணியில் சேர்ந்த அனைத்து காவலர்களும் தங்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.

இந்த கோரிக்கையை தொடர்ந்து தற்போது 8431 ஆண் காவலர்களில் 25 காவலர்கள் தங்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் 25 காவலர்களுக்கு மட்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தை வழங்க உத்தரவு பிறப்பித்தனர்.

மதுரை வாழ் மக்களே., சித்திரை திருவிழாவில் அன்னதானம், பிரசாதம் வழங்க கூடாது., பதிலடி கொடுத்த நீதிபதி!!!

இந்த உத்தரவை தொடர்ந்து மற்ற காவலர்களும் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த கோரிக்கைகளை முன் வைத்து வருகின்றனர். சென்னை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை ஏற்றுக் கொண்டு அரசு பழைய ஓய்வூதிய திட்டத்தை வழங்குமா?? இல்லை மேல்முறையீடு செய்வார்களா என காவலர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here