பழைய ஓய்வூதிய திட்டம் குறித்த அதிரடி அப்டேட்கள் – அரசு அலுவலர்கள் பார்க்க வேண்டிய முக்கிய பதிவு!! 

0
பழைய ஓய்வூதிய திட்டம் குறித்த அதிரடி அப்டேட்கள் - அரசு அலுவலர்கள் பார்க்க வேண்டிய முக்கிய பதிவு!! 

பழைய ஓய்வூதிய திட்டம் குறித்து, அரசு அலுவலர்கள் அனைவரும் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய கருத்துக்கள் இங்கே தொகுப்பாக கொடுக்கப்பட்டுள்ளது.

முக்கிய கருத்துக்கள்:

இந்தியாவில் பெரும்பாலான மாநிலங்களில், அரசு பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் செயல்படுத்தி வருகிறது. குறிப்பாக ராஜஸ்தான், ஜார்கண்ட், இமாச்சலப் பிரதேச அரசுகளை தொடர்ந்து சதிஷ்கர் மாநிலத்திலும் பழைய ஓய்வூதியம் அமல்படுத்தப்பட உள்ளது. தமிழகத்தில், பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என அரசு ஊழியர்கள் நீண்ட நாட்களாக போராடி வருகின்றனர். இந்தத் திட்டம் அமலானால், ஏப்ரல் 1, 2004 க்கு பிறகு அரசு வேலைக்கு வந்த 3 லட்சம் அரசு ஊழியர்கள் பயனடைவார்கள்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

தற்போது இந்த பழைய ஓய்வூதிய திட்டத்தில் என்னென்ன நன்மைகள் உள்ளது என்பதை பார்ப்போம். பொது வருங்கால வைப்பு நிதி கொடுக்கப்படும். ஓய்வூதியத்திற்காக சம்பளப் பிடித்தம்  செய்யப்படுவதில்லை. ஓய்வூதியம் முழுவதும் அரசால் வழங்கப்படுகிறது. அதேபோல், ஓய்வூதியம் பெறும் போது கடைசி சம்பளத்தில் 50%க்கான உத்தரவாதம் வழங்கப்படும். பணியில் இருக்கும் போது இறந்தால், சம்பந்தப்பட்டோர் குடும்பத்திற்கு ஓய்வூதியம் மற்றும் அரசு பணி கிடைக்கும்.

pension

ஆனால், புதிய ஓய்வூதிய திட்டத்தில் ஊழியர்கள் அரசை சார்ந்து இல்லாமல் ஒரு மிகப்பெரிய காப்பீட்டு நிறுவனத்துடன் தொடர்பு கொள்ள வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால் அதை திரும்ப பெற வேண்டும் என ஊழியர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here