தமிழகத்தில் தலையெடுக்கும் புதிய தொற்று.., பீதியில் பொதுமக்கள்!

0

தமிழகத்தில் முதியவர் ஒருவருக்கு தற்போது பன்றி காய்ச்சல் உறுதி ஆகி உள்ளது. இதனால் தமிழக மக்கள் அதிக அச்சத்தில் உள்ளனர்.

பன்றி காய்ச்சல் உறுதி:

உலக மக்களையே கடந்த 2 1/2 வருடங்களாக கொரோனா நோய் உலுக்கி வந்தது. இந்த நோய் பரவலை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகளால் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. இதன் பலனாக நிலை சீராகி வந்தது. இருப்பினும் கொரோனா பெருந்தொற்று இன்னும் ஓய்ந்தபாடில்லை.கொரோனாவை தொடர்ந்து குரங்கு அம்மை நோய் பரவலும் மக்களை அச்சுறுத்தி வந்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இந்த நோய் பரவலை தொடர்ந்து பன்றி காய்ச்சல் தற்போது பரவி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

தமிழகத்தில், சிவகங்கை மாவட்டம் ஆண்டிச்சியூரணியை சேர்ந்த 61 வயது முதியவர் பன்றி காய்ச்சலால் தற்போது பாதிக்கப்பட்டு உள்ளார். இதன் காரணமாக அவர், காரைக்குடி தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அதாவது கடந்த செப் 8ம் தேதி இந்த முதியவர் தொடர் காய்ச்சல், மூச்சுத் திணறலால் அவதிப்பட்டார், இதை தொடர்ந்து அவர் காரைக்குடி தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார்.

அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளித்தும், காய்ச்சல் குறையாததால், மருத்துவர்கள் முதியவரின் ரத்த மாதிரிகளை சென்னைக்கு பரிசோதனைக்கு அனுப்பினர். செப் 11 அன்று, பரிசோதனை முடிவு வெளியானது. அந்த முடிவில், அவருக்கு பன்றி காய்ச்சல் இருப்பது உறுதியானது. மேலும் சுகாதாரத்துறை துணை இயக்குனர் ராம் கணேஷ் அறிவுறுத்தலின்படி, முதியவருடன் தொடர்பில் இருந்தவர்களின் ரத்த மாதிரிகளும் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டு உள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here