கொரோனா நோயாளிகளுக்காக இலவச சேவை வழங்கும் ஓலா – அந்த மனசு தான் சார் கடவுள்!!

0

நாட்டில் கொரோனாவின் இரண்டாவது அலை அதிகரித்து வருவதால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். தற்போது அவர்களுக்கு உதவி செய்யும் வகையில் ஓலா நிறுவனம் ஓர் அறிக்கையை வெளியிட்டுள்ளது.

ஓலா:

இந்தியாவில் சுமார் ஒரு ஆண்டு காலத்திற்கும் மேலாக கொரோனா பரவல் இருந்து வருகிறது. கடந்த ஆண்டு முதல் அலை தற்போது இரண்டாம் அலை என்று மக்களை பல விதமாக பாதித்து வருகிறது. கடந்த ஆண்டு வீசிய கொரோனாவின் முதல் அலையில் ஏற்பட்ட பலி எண்ணிக்கையை விட தற்போது வீசப்படும் கொரோனாவின் இரண்டாம் அலையில் அதிகமாக இருந்து வருகிறது.

Facebook  => Like செய்ய கிளிக் பண்ணுங்க!!

மேலும் மக்கள் கொரோனாவினால் தற்போது பல்வேறு இன்னல்களை சந்தித்து வருகின்றனர். ஆக்சிஜன் தட்டுப்பாடு, படுக்கை வசதிக்கு தட்டுப்பாடு போன்ற பல வேதனைக்குரிய பிரச்சனைகளை சந்தித்து வருகின்றனர். இந்நிலையில் தற்போது மக்களுக்கு உதவி செய்யும் வகையில் ஓலா நிறுவனத்தின் சிஇஓ பாவிஷ் அகர்வால் ஓர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

ஆக்சிஜன் டேங்கில் ஏற்பட்ட கசிவு – கோவாவில் ஏற்பட்ட பதட்ட சம்பவம்!!

அதன்படி அவர் கூறியதாவது, கொரோனாவால் பாதிக்கப்பட்டு வீட்டில் தனிமையாக இருந்து வருபவர்களுக்கு வீட்டிற்கே சென்று இலவசமாக ஆக்சிஜன் செறிவூட்டிகளை வழங்கும் பணியை செய்ய ஓலா நிறுவனம் முன்வந்துள்ளது. முதற்கட்டமாக இந்த வாரம் 500 ஆக்சிஜன் செறிவூட்டிகள் பெங்களுருவில் தொடங்கப்படும் என்றும் விரைவில் அனைத்து நகரங்களிலும் இந்த சேவை அறிமுகப்படுத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here