இரண்டு மடங்காக உயர்ந்த OLA சேவை கட்டணம்.., பயணிகள் பேரதிர்ச்சி!!

0
இரண்டு மடங்காக உயர்ந்த OLA சேவை கட்டணம்.., பயணிகள் பேரதிர்ச்சி!!

ஓலா நிறுவனத்தின் ஆட்டோ மற்றும் கார் சேவைகளுக்கான கட்டணம் திடீரென உயர்த்தப்பட்டு உள்ளது. இதனால் பொதுமக்கள் பெரும் இன்னல்களை சந்தித்து வருவதாக வருத்தம் தெரிவித்துள்ளனர்.

கட்டண உயர்வு:

மாநகரங்களில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருப்பதால் மக்கள் பயணங்களுக்கு ஓலா ஆட்டோ, ஊபர் ஆட்டோ உள்ளிட்ட ஆன்லைன் செயலிகளை நம்பி உள்ளனர். இந்த சேவை பொதுமக்களுக்கு மிகவும் பாதுகாப்பாக இருப்பதாகவும் கூறுகின்றனர். ஏனென்றால் நாம் எங்கு, எந்த வழித்தடத்தில் செல்கிறோம் என்பதை நாம் ஆப் மூலமாகவே தெரிந்துகொள்ளலாம்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இந்த நிலையில் ஓலா (ola ) ஆட்டோ, கார் சேவைகளுக்கான கட்டணம் ஜெட் வேகத்தில் உயர்த்தப்பட்டுள்ளதால் பயணிகள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மேலும் ஓலா ஆட்டோவிற்கான கட்டணம் 2.5 கி.மீ தூரம் வரை ரூ.55 வசூலிக்கப்பட்ட நிலையில், தற்போது ரூ.110 முதல் ரூ.135 வரை பெறப்படுகிறது. இதை தொடர்ந்து ஓலா ஆட்டோ கட்டணம், பீக் ஹவர்களில் 2 மடங்கு கட்டணமாக வசூலிக்கப்படுவதாகவும் புகார் எழுந்துள்ளது.

தமிழக பள்ளி மாணவர்களுக்கு சர்ப்ரைஸ் – காலாண்டு விடுமுறை மேலும் நீட்டிப்பு! கல்வித்துறை உத்தரவு!!

எனவே இது குறித்து அரசு விசாரணை நடத்தி, நல்ல முடிவு எடுக்க வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் ஓலா கட்டணம் இப்படி உயர்ந்து கொண்டே போனால், இனி நடந்து தான் போக வேண்டும் என இணையத்தில் மக்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here