தமிழகத்தில் குடிநீர் பற்றாக்குறையை போக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தி.மு.க. தலைமையிலான அரசு மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் தர்மபுரி, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்ட மக்கள் காவிரி நீர் பெறும் வகையில் ஒகேனக்கல் 2ஆம் கட்ட கூட்டு குடிநீர் திட்டத்தை, தனது கனவு திட்டமாக அறிவித்து அமலுக்கு கொண்டு வர முதல்வர் மு.க.ஸ்டாலின் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தார்.
அரசு அனுமதி இல்லாமல் தியேட்டரில் சிறப்பு காட்சிகள் ஒளிபரப்பு., பிறப்பிக்கப்பட்ட அதிரடி உத்தரவு!!!
அதன் பலனாக ரூ.7,386 கோடி மதிப்பீட்டில் உருவாக உள்ள ஒகேனக்கல் 2ஆம் கட்ட கூட்டு குடிநீர் திட்டத்திற்கு ஜப்பான் நிதியுதவியுடன் செயல்படுத்த ஒன்றிய அரசு ஒப்புதல் அளித்துள்ளதாக தெரிவித்துள்ளனர். இத்திட்டத்தின் மூலம் தொழிற்சாலைகள் உட்பட 45 லட்சம் பேர் பயனடைவார்கள் என குறிப்பிட்டுள்ளனர்.