ரொம்ப நேரம் உட்கார்ந்து இருந்து வேலை பாக்குறவங்களா நீங்க.., இதை கட்டாயம் செஞ்சுருங்க!!

0
ரொம்ப நேரம் உட்கார்ந்து இருந்து வேலை பாக்குறவங்களா நீங்க.., இதை கட்டாயம் செஞ்சுருங்க!!
ரொம்ப நேரம் உட்கார்ந்து இருந்து வேலை பாக்குறவங்களா நீங்க.., இதை கட்டாயம் செஞ்சுருங்க!!

இன்றைய காலகட்டத்தில் அதிக நேரம் அலுவலகத்தில் உட்கார்ந்து வேலை பார்ப்பவர்கள் எதிர்கொள்ளும் முக்கிய பிரச்சனைகளில் ஒன்று முதுகு வலி. இதை கண்டுகொள்ளாமல் விட்டால், அதன் பின்விளைவு மிகவும் பயங்கரமாக இருக்கும்.முதலில் குனிந்து கூன் போடாமல், நிமிர்ந்து உட்காரும் அளவிற்கு சரியான இருக்கையை தேர்வு செய்ய வேண்டும். இதன் மூலம் நாம் வளைந்து நெளிந்து உட்கார முடியாது, நேராக உட்காரும் போது முதுகு தண்டுவடப் பகுதியில் அதிக அழுத்தம் குறையும்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

1. அதிக நேரம் உட்கார்ந்து வேலை பார்ப்பதால் முதுகு வலியுடன், உடல் எடையும் கூடும். இதன் மூலம் முதுகு வலி அதிகரிக்க வாய்ப்பு உள்ளது, எனவே நாள்தோறும் சிறு சிறு உடற்பயிற்சிகள் மற்றும் டயட் follow செய்யும் செய்தால் உடல் எடை குறையும். இதன் வாயிலாக முதுகு வலியும் குறையும் என்பது குறிப்பிடத்தக்கது.

2. மேலும் எலும்புக்கு வலிமை சேர்க்கும் உணவுகளை டயட்டில் சேர்க்க வேண்டும்.

3. உக்கார்ந்து வேலை பார்க்கும் போது ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை கொஞ்ச நேரம் நடப்பதை வழக்கப்படுத்திக் கொள்ளலாம்.

4. எலும்புகள் வலு பெற கால்சியம் சத்து மிகவும் அவசியம் . அந்த வகையில் நாள் தோறும் பால் சார்ந்த உணவுகள் எடுத்துக் கொள்வது நல்லது. இதுமட்டுமல்லாமல் முட்டை, பீன்ஸ் போன்றவைகளையும் சேர்த்து கொள்வது நல்லது.

5. வாரத்திற்கு ஒரு முறை ஜூம்பா பயிற்சி, சைக்கிள் ஓட்டுதல், நீச்சல் போன்ற பயிற்சிகளை மேற்கொள்ளலாம்

6. இதனைத்தொடர்ந்து பிசியோதெரபிஸ்ட்டை ஒரு முறை பார்த்து எளிமையான உடற்பயிற்சிகளை கற்று கொண்டு செய்து வந்தால், இந்த முதுகு வலியில் இருந்து நாம் மீண்டு வரலாம்.

7. முதுகின் நடுப்பகுதியில் வலி உள்ளவர்கள் ஒரு பக்கம் சாய்ந்தவாறே தூங்கினால் வலி ஓரளவுக்குக் குறையும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here