மாநிலத்தில் தொடர்ந்து 5 நாட்கள் மூடப்படும் பள்ளிகள் – கல்வித்துறை அதிகாரப்பூர்வ உத்தரவு!!

0
மாணவர்களே அலர்ட்.., உதவித்தொகை விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் நீட்டிப்பு!!
மாணவர்களே அலர்ட்.., உதவித்தொகை விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் நீட்டிப்பு!!

ஒடிசா மாநிலத்தில், தொடர்ந்து வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால் இன்று முதல் வருகிற ஏப்ரல் 30ம் தேதி வரை அனைத்து பள்ளிகளையும் மூடுமாறு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.

கல்வித்துறை சுற்றறிக்கை:

கொரோனா பெரும் தொற்றுக்கு பிறகு, பள்ளிகள் கடந்த பிப்ரவரி மாதம் முதல் திறக்கப்பட்டு, நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கடந்த சில தினங்களாக டெல்லி, தமிழகம், ஒடிசா, மகாராஷ்டிரா உட்பட பல மாநிலங்களில் கோடை வெயில் கொளுத்தி வருகிறது. இதனால், பள்ளி குழந்தைகள் அதிக அளவில் பாதிக்கப்படுகின்றனர். இதனை கருத்தில் கொண்டு, ஒடிசா மாநில அரசு அதிரடி உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது.

school students

அதாவது, ஏப்ரல் 26 ஆம் தேதியான இன்று முதல், வருகிற ஏப்ரல் 30ஆம் தேதி வரை தொடர்ந்து 5 நாட்கள், மாநிலம் முழுவதும் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகள் அனைத்தையும் மூடும் படி உத்தரவிடப்பட்டுள்ளது. இது குறித்த சுற்றறிக்கையை பள்ளிக்கல்வித்துறை அனுப்பி உள்ளது. ஆனால், இந்த நாட்களில் ஏதேனும் தேர்வுகள் நடைபெறுவதாக இருந்தால், அவை திட்டமிட்டபடி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here