நாட்டையே உலுக்கிய ஒடிசா ரயில் விபத்து…, இரங்கல் தெரிவித்த விராட் கோலி!!

0
நாட்டையே உலுக்கிய ஒடிசா ரயில் விபத்து..., இரங்கல் தெரிவித்த விராட் கோலி!!
நாட்டையே உலுக்கிய ஒடிசா ரயில் விபத்து..., இரங்கல் தெரிவித்த விராட் கோலி!!

ஒடிசா மாநிலத்தில் நடந்த ரயில் கோர விபத்தானது, நாட்டை பெரும் சோகத்தில் ஆழத்தி உள்ளது. அதாவது, ஹவுரா எக்ஸ்பிரஸ் தடம் புரண்டதன் மூலம், அந்த வழியாக வந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் மற்றும் சரக்கு ரயில்கள் பயங்கரமான விபத்துக்கு உள்ளானது. இந்த விபத்தினால், தற்போது வரை 280 உயிரிழந்துள்ளவர்களின் எண்ணிக்கை பதிவாகி உள்ளது.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

மேலும், 900க்கு மேற்பட்டோர் இடிபாடுகளில் சிக்கி படுகாயம் அடைந்துள்ளனர். இவர்கள் மருத்துவர்கள் கண்காணிப்பில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில், உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு பிரதமர் மோடி, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட பலர் தங்களது இரங்கலை தெரிவித்ததுடன் நிவாரண உதவிகளையும் அறிவித்துள்ளனர்.

சினிமா வாய்ப்பே வேண்டாம்., கேட்டாலே தலைதெறித்து ஓடும் ஷிவானி., அதற்கு இது தான் காரணமாம்!!

இதனை தொடர்ந்து, WTC இறுதிப் போட்டிக்காக இங்கிலாந்தில் பயிற்சி மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி, இந்த கோர ரயில் விபத்தை அறிந்து தனது இரங்கலை தெரிவித்துள்ளார். மேலும், இந்த விபத்தில் உயிரிழந்த அனைவரின் குடும்பத்திற்காகவும், படுகாயம் அடைந்தவர்கள் விரைவில் குணமடைந்து மீண்டு வரவும் பிரார்த்திக்கிறேன் என்று விராட் கோலி கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here