ஒடிசா ரயில் விபத்து விவகாரம் – நிவாரண அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர் நவீன் பட்நாயக்!!

0
ஒடிசா ரயில் விபத்து விவகாரம் - நிவாரண அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர் நவீன் பட்நாயக்!!
ஒடிசா ரயில் விபத்து விவகாரம் - நிவாரண அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர் நவீன் பட்நாயக்!!

தற்போது உலகையே அதிர வாய்த்த சம்பவம் தான் சமீபத்தில் நடந்த ஒடிசா ரயில் விபத்து. அதாவது பெங்களூரு – ஹவுரா சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ், சாலிமர்-சென்னை சென்ட்ரல் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் மற்றும் சரக்கு ரயில் உள்ளிட்ட ரயில்கள் ஒரே நேரத்தில் மோதி பெரும் விபத்துக்கு உள்ளானது. இந்த கோர சம்பவத்தில் கிட்டத்தட்ட 280-க்கும் மேற்பட்டோர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். அது போக 900 க்கும் மேற்பட்டோர் பலத்த காயமடைந்தனர்.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இது நாட்டின் மிக மோசமான ரயில் விபத்துகளில் ஒன்றாகும். ஒடிசா ரயில் விபத்துக்கு சிக்னல் கோளாறு தான் காரணம் என்று முதற்கட்ட விசாரணை ஆய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஒடிசா அரசாங்கம் ஒரு நிவாரண அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதாவது, ஒடிசா ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா 5 லட்சமும், பலத்த காயங்கள் ஏற்பட்டவர்களுக்கு ஒரு லட்சமும் அரசாங்கம் சார்பாக வழங்கப்படும் என்று முதலமைச்சர் நவீன் பட்நாயக் அறிவித்துள்ளார்.

 

ஆந்திரா முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி நிவாரணம் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதாவது, விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு ரூ.10 லட்சமும், படுகாயம் அடைந்தவர்களுக்கு ரூ.5 லட்சமும், ஓரளவிற்கு காயம் ஏற்பட்டவர்களுக்கு ரூ.1 லட்சம் நிதி வழங்க இருப்பதாக அறிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here