ஒடிசா விபத்தின் எதிரொலி: சென்னை ரயில்கள் ரத்து & 5 வழித்தடங்கள் மாற்றம்…, முழு லிஸ்ட் உள்ளே!!

0
ஒடிசா விபத்தின் எதிரொலி: சென்னை ரயில்கள் ரத்து & 5 வழித்தடங்கள் மாற்றம்..., முழு லிஸ்ட் உள்ளே!!
ஒடிசா விபத்தின் எதிரொலி: சென்னை ரயில்கள் ரத்து & 5 வழித்தடங்கள் மாற்றம்..., முழு லிஸ்ட் உள்ளே!!

ஒடிசா மாநிலம் பஜனகா ரயில் நிலையத்தில், சென்னை நோக்கி வந்த ஹவுரா எக்ஸ்பிரஸ் தடம் புரண்டதையடுத்து, கோரமண்டல் எக்ஸ்பிரஸ் மற்றும் சரக்கு ரயில்கள் மோதி 17 பெட்டிகள் மிகுந்த பாதிப்புக்கு உள்ளாகியது. இந்த கோர விபத்தினால், இதுவரை 900க்கும் மேற்பட்ட ரயில் பயணிகள் உட்பட பொதுமக்கள் படுகாயம் அடைந்துள்ளதாகவும் 280 பேர் உயிரிழந்துள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

இந்த விபத்து நடந்த பகுதியில், மீட்பு பணிகள் இன்னும் தீவிரமாக நடைபெற்று வருவதால், கொல்கத்தாவில் இருந்து இயக்கப்படும் சென்னை ரயில் உட்பட 6 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. மேலும், அவ்வழியே செல்லக்கூடிய ரயில்களை மாற்றுப்பாதையில் இயக்கப்பட உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான முழு லிஸ்ட் கீழே படத்தில் காணலாம்.

உஷாரய்யா உஷாரு.., இந்தந்த பகுதிகளுக்கு பவர் கட்? மின்வாரியம் வெளியிட்ட அறிவிப்பு!!

இந்த விபத்து ஏற்பட்ட ஒடிசாவின் பஜனகா ரயில் நிலையத்தில் மீட்பு பணிகள் அனைத்தும் முடிந்து, சாதாரண நிலைக்கு திரும்பிய பிறகு தான், ரயில்கள் இயக்கப்படுவது குறித்து தகவல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், மாற்று வழியில் தான் ரயில்கள் தாற்காலிகமாக இயக்கப்பட கூடும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here