ஒடிசா விபத்து விவகாரம்.., மீண்டும் ரயில் சேவை தொடக்கம்.., ரயில்வே நிர்வாகம் அறிவிப்பு!!

0
ஒடிசா விபத்து விவகாரம்.., மீண்டும் ரயில் சேவை தொடக்கம்.., ரயில்வே நிர்வாகம் அறிவிப்பு!!
ஒடிசா விபத்து விவகாரம்.., மீண்டும் ரயில் சேவை தொடக்கம்.., ரயில்வே நிர்வாகம் அறிவிப்பு!!

பாலசோர் மாவட்டத்தில் பகனகா பஜார் ரயில் நிலையம் அருகே மூன்று ரயில்கள் ஒன்றோடு ஒன்று மோதி கோர விபத்து ஏற்பட்டது. இதில் ரயில்களின் பெட்டிகள் மற்றும் தண்டவாளங்கள் உருக்குலைந்தது. இந்த விபத்தில் 285 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். அதே போல் 1000க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

மேலும் கடந்த 3 நாட்களாக சீரமைக்கும் பணியில் ரயில்வே ஊழியர்கள் ஈடுபட்டு வந்த நிலையில் தற்போது அந்த பணி நிறைவு பெற்றுள்ளது. இதையடுத்து சேதமடைந்த ரயில் பாதைகளை சீர் செய்யும் பணிகள் படு தீவிரமாக நடைபெற்றது. தற்போது அந்த பணிகளும் நிறைவடைந்ததால், வழிப்பாதையை சோதனை செய்யும் விதமாக நேற்று இரவு சரக்கு ரயில் சேவை தொடங்கப்பட்டது.

கொழுகொழுப்பா இருந்த நயன்., எடை குறைய இது தான் காரணமா? லீக்கான தகவல்!!

இதனை மத்திய ரெயில்வே மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் ரயில் சேவை மீண்டும் தொடங்கப்பட்டதை ஆய்வு செய்தார். இந்நிலையில் ரயில்வே நிர்வாகம் சார்பாக ஒரு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதாவது பாதை சீரமைக்கப்பட்டதன் காரணமாக இன்று முதல் ரெயில் சேவை தொடங்கி இருக்கிறது . மேலும் நேற்று வரை 90 ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது 56 ஆக குறைக்கப்பட்டுள்ளது என்று ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here