50 ஓவர் உலக கோப்பைக்கு தகுதி பெற முன்னிலை இருக்கும் அணிகள் இதுதான்…, முழு விவரம் உள்ளே!!

0
50 ஓவர் உலக கோப்பைக்கு தகுதி பெற முன்னிலை இருக்கும் அணிகள் இதுதான்..., முழு விவரம் உள்ளே!!
50 ஓவர் உலக கோப்பைக்கு தகுதி பெற முன்னிலை இருக்கும் அணிகள் இதுதான்..., முழு விவரம் உள்ளே!!

இந்தியாவில் 50 ஓவர் உலக கோப்பை தொடரானது வரும் அக்டோபர் மாதம் முதல் நடைபெற இருக்கிறது. இந்த உலக கோப்பை தொடரை நடத்தும் நாடு என்ற விதத்தில் இந்திய அணியானது முதல் அணியாக தகுதி பெற்று உள்ளது. 13 அணிகள் இந்த உலக கோப்பை தொடரில் பங்கு பெறுவதற்காக போட்டியிட்டு வருகின்றனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இதில், இந்திய அணியை, 139 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதன் காரணமாகவும் இந்திய அணி 50 ஓவர் உலக கோப்பைக்கு முதல் அணியாகவும் தகுதி பெற்றுள்ளது. இந்தியா, இலங்கை, பாகிஸ்தான், வெஸ்ட் இண்டீஸ் உள்ளிட்ட 13 அணிகளில் முதல் 7 இடங்களை பெரும் அணி நேரடியாக 50 ஓவர் உலக கோப்பைக்கு தகுதி பெறும்.

T20 உலக கோப்பைக்கான பலம் வாய்ந்த ஆஸ்திரேலிய அணி அறிவிப்பு…, சாம்பியன் பட்டத்தை தக்க வைத்துக் கொள்ளுமா இந்த படை??

இந்த பட்டியலில், இந்தியா (139), பாகிஸ்தான் (130), நியூசிலாந்து (130), இங்கிலாந்து (125), ஆஸ்திரேலியா (120), பங்களாதேஷ் (120) மற்றும் ஆப்கானிஸ்தான் (115) புள்ளிகளுடன் டாப் 7 ல் உள்ளனர். அக்டோம்பர் மாதம் நடைபெற உள்ள உலக கோப்பை தொடருக்கு முன் வரை இதே நிலையில் அணிகள் தொடர்ந்தால், இந்த 7 அணிகள் சூப்பர் சுற்றுக்கு நேரடியாக தகுதி பெறும்.

இந்த பட்டியலில், வெஸ்ட் இண்டீஸ் (88), இலங்கை (77), அயர்லாந்து (68), தென் ஆப்பிரிக்கா (59) புள்ளிகளுடன் அடுத்த இடங்களில் உள்ளனர். பாகிஸ்தான் அணி நியூசிலாந்துக்கு எதிராக நேற்று நடைபெற்ற ஒருநாள் போட்டியை வென்றதன் மூலம், 3 வது இடத்தில் இருந்து 2 வது இடத்திற்கு முன்னேறியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here