உலக கோப்பைக்கான அணிகளை இந்த தேதிக்குள் அறிவிக்க வேண்டும்…, கட்டுப்பாடு விதித்த நிர்வாகம்!!

0
உலக கோப்பைக்கான அணிகளை இந்த தேதிக்குள் அறிவிக்க வேண்டும்..., கட்டுப்பாடு விதித்த நிர்வாகம்!!
உலக கோப்பைக்கான அணிகளை இந்த தேதிக்குள் அறிவிக்க வேண்டும்..., கட்டுப்பாடு விதித்த நிர்வாகம்!!

இந்தியாவில் அக்டோபர் மாதம் 5ம் தேதி முதல் சர்வதேச அளவிலான 10 அணிகளுக்கு இடையே ஒருநாள் உலகக் கோப்பைத் தொடர் நடைபெற இருக்கிறது. இந்த தொடர், தொடங்குவதற்கு முழுமையாக இரண்டு மாதங்கள் மட்டுமே உள்ள நிலையில், அனைத்து அணிகளும் தீவிரமாக பயிற்சி செய்து வருகின்றனர். இந்த உலக கோப்பை தொடருக்கு முன் ஆசிய கோப்பை தொடர் வருவதால் இதனை இந்திய அணி நன்கு பயன்படுத்திக்கொண்டு பயிற்சி பெறும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

இந்நிலையில், உலக கோப்பை தொடருக்கான அணிகளை அறிவிப்பது குறித்த முக்கிய தகவல் ஒன்று வெளியாகி உள்ளது. அதாவது, செப்டம்பர் 5 ஆம் தேதிக்குள் உலகக் கோப்பைக்கான ஆரம்ப அணியை அறிவிக்க வேண்டும். அணியில் ஏதேனும் மாற்றங்கள் ஏற்படுத்த விரும்பினால், அதனை செப்டம்பர் 15 ஆம் தேதி முதல் 27 ஆம் தேதிக்குள் அறிவிக்க வேண்டும் என ஐசிசி தரப்பில் இருந்து வெளியாகி உள்ளது. இதற்கிடையில் ஆஸ்திரேலிய அணி தங்களது உலக கோப்பைக்கான அணியை சமீபத்தில் அறிவித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here