இலங்கை அணியானது, நியூசிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் தொடரை இழந்ததன் மூலம், ஒரு நாள் உலக கோப்பைக்கு நேரடியாக தகுதி பெற தவறி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
உலக கோப்பை:
அக்டோபர் மாதம் இந்தியாவில் நடைபெற உள்ள, ஒருநாள் (50 ஓவர்) உலக கோப்பை தொடருக்காக, 13 அணிகளுக்கு இடையே தகுதி சுற்று போட்டிகள் கடந்த 2019ம் ஆண்டில் இருந்து நடைபெற்று வருகிறது. இந்த தகுதி சுற்றில், உலக கோப்பையை நடத்தும் நாடு என்ற விதத்தில், இந்திய அணி நேரடியாக தகுதி பெற்றது. இதையடுத்து, தொடங்கப்பட்ட தகுதி சுற்று போட்டிகளின் முடிவில், முதல் 8 இடங்களை பிடிக்கும் அணிகள் உலகக் கோப்பைக்கு நேரடியாக தகுதி பெறும் என்ற நிலை இருந்தது.
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
இதன்படி, நியூசிலாந்து, இங்கிலாந்து, இந்தியா, பங்களாதேஷ், பாகிஸ்தான், ஆஸ்திரேலியா மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய 7 அணிகள் நேரடியாக உலக கோப்பைக்கு தகுதி பெற்றன. மீதமுள்ள ஓர் இடத்திற்கு தான், கடுமையான போட்டி நிலவி வந்தது. இந்நிலையில், இலங்கை அணி, நியூசிலாந்து அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை வென்றால், அந்த ஓர் இடத்தை பிடிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.
பத்து தல படத்தில் நரிக்குறவர்களை தியேட்டரில் அனுமதிக்காத சர்ச்சை – மாநில மனித உரிமை ஆணையம் விசாரணை!!
இந்த ஒருநாள் தொடரை நியூசிலாந்து அணியானது 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. இதனால், இலங்கை அணி 81 புள்ளிகளுடன் ஒருநாள் உலக கோப்பைக்கு நேரடியாக தகுதி பெற தவறியது. மேலும், தற்போது புள்ளிப் பட்டியலில் 8வது இடத்தில் இருக்கும் வெஸ்ட் இண்டீஸ் அணி இந்த இடத்தை தக்க வைத்துக் கொண்டால், உலக கோப்பைக்கு நேரடியாக தகுதி பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
New Zealand win the ODI series 2-0, as Sri Lanka fail to secure direct qualification for the 2023 @cricketworldcup.
Watch the #NZvSL series live on https://t.co/F4QZcjJoDV (in select regions) 📺#CWCSL | 📝 Scorecard: https://t.co/kpIn96efwD pic.twitter.com/Qll1zgWb3o
— ICC (@ICC) March 31, 2023