ஐசிசி சார்பாக இந்தியாவில் ஒருநாள் உலக கோப்பை தொடர் சர்வதேச அளவிலான 10 அணிகளுக்கு இடையே விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில், லீக் சுற்றுகள் வடிவில் ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுக்கு எதிராக தலா ஒரு போட்டியை தற்போது விளையாடி வருகின்றன. இதில், நெதர்லாந்து மற்றும் இங்கிலாந்து ஆகிய அணிகளை தவிர்த்து மற்ற அணிகள் அனைத்தும் தலா 8 போட்டிகளை விளையாடி முடித்துள்ளன. இதன் வெற்றி தோல்வி அடிப்படையில் புள்ளிப் பட்டியல் அப்டேட் செய்யப்பட்டுள்ளது.
Enewz Tamil WhatsApp Channel
அதாவது, இந்திய அணியானது விளையாடிய 8 போட்டியையும் வென்றதன் மூலம் 16 புள்ளிகளுடன் முதலிடத்தை பெற்று அரையிறுதிக்கு முன்னேறி உள்ளது. இதனை தொடர்ந்து, தென் ஆப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் தலா 12 புள்ளிகளுடன் 2 மற்றும் 3 வது இடத்தையும், நியூசிலாந்து, பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் தலா 8 புள்ளிகளுடன் 4, 5 மற்றும் 6 வது இடத்தையும் பெற்று அரையிறுதிக்கு முன்னேறுவதில் முன்னிலை பெற்றுள்ளனர். மேலும், தலா 4 புள்ளிகளுடன் பங்களாதேஷ், இலங்கை மற்றும் நெதர்லாந்து 7, 8 மற்றும் 9 வது இடத்திலும், இங்கிலாந்து அணி 2 புள்ளிகளுடன் கடைசி இடத்திலும் உள்ளது.
தமிழக விளையாட்டு துறையில் சிறப்பு ஏற்பாடு., அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அதிரடி அறிவிப்பு!!!