இந்தியாவில் நடைபெற்று வரும் ஒருநாள் உலக கோப்பை தொடரில், நேற்று (அக்டோபர் 31) பங்களாதேஷ் அணியை எதிர்த்து பாகிஸ்தான் அணி மோதியது. இந்த போட்டியில், முதலில் பேட்டிங் செய்த பங்களாதேஷ் அணி 45.1 ஓவரில் 204 ரன்கள் எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் பறிகொடுத்தது. இதையடுத்து களமிறங்கிய பாகிஸ்தான் அணி 32.3 ஓவரில் 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 205 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றி மூலம், தொடர்ந்து 4 போட்டிகளில் தோல்வி அடைந்த பாகிஸ்தான் அணி, தொடர் தோல்விக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது.
Enewz Tamil WhatsApp Channel
- இந்த போட்டியில் 3 விக்கெட்டுகளை கைப்பற்றிய பாகிஸ்தானின் ஷஹீன் அப்ரிடி, சர்வதேச ஒருநாள் அரங்கில் அதிவேகமாக (51 போட்டிகள்) 100 விக்கெட்டுகளை கைப்பற்றிய வேகப்பந்து வீச்சாளர் ஆனார்.
- உலக கோப்பை அரங்கில் அதிக விக்கெட்டுகளை (32 விக்கெட்டுகள்) கைப்பற்றிய 4வது பாகிஸ்தான் வீரர் என்ற பெருமையும் ஷஹீன் அப்ரிடி பெற்றுள்ளார்.
- இந்த போட்டியில் பாகிஸ்தான் ஃபகார் ஜமான் 7 சிக்ஸர்கள் விளாசியதன் மூலம், அதிக சிக்ஸர்கள் அடித்த 2வது பாகிஸ்தான் வீரரானார்.