IND vs PAK போட்டியால் உலக கோப்பையில் மாற்றம் ஏற்படுவது உறுதி…, பிசிசிஐயின் செயலாளர் அறிவிப்பு!!

0
IND vs PAK போட்டியால் உலக கோப்பையில் மாற்றம் ஏற்படுவது உறுதி..., பிசிசிஐயின் செயலாளர் அறிவிப்பு!!
IND vs PAK போட்டியால் உலக கோப்பையில் மாற்றம் ஏற்படுவது உறுதி..., பிசிசிஐயின் செயலாளர் அறிவிப்பு!!

இந்தியாவில் ஐசிசி சார்பாக ஒருநாள் உலக கோப்பை தொடர் அக்டோபர் மாதம் முதல் நடைபெற இருக்கிறது. இந்த தொடருக்கான முழு அட்டவணையும் ஐசிசியானது கடந்த மாதம் வெளியீட்டு இருந்தது. இதில், இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டி சில காரணங்களால் மாற்றம் ஏற்படும் என முன்பு தகவல் வெளியாகி இருந்தது. இதையடுத்து, நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பிசிசிஐயின் செயலாளர் ஜெய் ஷா இது குறித்து தகவலை வெளியிட்டுள்ளார்.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

அதாவது, உலகக் கோப்பைக்கான தேதிகளில் மாற்றங்கள் ஏற்படும் என்றும், அதற்கான புதிய அட்டவணை இரண்டு, மூன்று நாட்களில் வெளியாகும் என்றும் தெரிவித்துள்ளார். இந்த உலக கோப்பைக்கான டிக்கெட் விற்பனை விரைவில் வருவதுடன், ரசிகர்களுக்கு இலவச குடிநீரும் வழங்குவதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன என்று கூறியுள்ளார். மேலும், சில முக்கிய கருத்துக்களை தெரிவித்துள்ளார். அதாவது, இந்தியா A அணி தென் ஆப்பிரிக்காவுக்கு பயணிக்கும். இங்கிலாந்து ஏ இந்திய அணிக்கு வரும். பும்ரா முழு உடல் தகுதியுடன் இருக்கிறார். ஹர்மன்பிரீத் கவுரின் தடைக்கு மேல்முறையீடு இல்லை உள்ளிட்டவைகளை கூறியுள்ளார்.

ஜடேஜா & குல்தீப்பின் சுழலில் சிக்கிய வெஸ்ட் இண்டீஸ்…, 5 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here