
ஐசிசி சார்பாக இந்தியாவில் ஒருநாள் உலக கோப்பை தொடர் சர்வதேச அளவிலான 10 அணிகளுக்கு இடையே கோலாகலமாக நடைபெற்று வருகிறது. அரையிறுதி போட்டியை நோக்கி நடைபெற்று வரும் இந்த தொடரில், இன்று (நவம்பர் 2) இந்திய அணியானது தனது 7 வது லீக் போட்டியில் இலங்கை அணியை எதிர்த்து போட்டியிட உள்ளது. இதுவரை நடந்த 6 போட்டிகளையும் வென்றுள்ள இந்திய அணி, இந்த தொடரில் தோல்வியே சந்திக்காத அணியாக உள்ளது.
Enewz Tamil WhatsApp Channel
இதனை தக்க வைத்துக் கொள்ளும் முனைப்புடனும், அரையிறுதிக்கு முன்னேறும் வாய்ப்பை உறுதி செய்துகொள்ளவும் இந்திய அணி இலங்கை அணிக்கு எதிராக கடுமையாக போராடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதே போல, இலங்கை இதுவரை விளையாடிய 6 போட்டியில் 2 ல் மட்டுமே வெற்றி பெற்றுள்ளதால், தோல்வியில் இருந்து மீள இந்திய அணி அதிக நெருக்கடி கொடுக்க கூடும். இதனால், இரு அணிகளும் தரமான பிளேயிங் லெவனை களமிறக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.