உலக கோப்பைக்கு முன் பிசிசிஐ போட்ட மாஸ்டர் பிளான்…, இந்திய அணி இதை சிறப்பாக பயன்படுத்துமா??

0
உலக கோப்பைக்கு முன் பிசிசிஐ போட்ட மாஸ்டர் பிளான்..., இந்திய அணி இதை சிறப்பாக பயன்படுத்துமா??
உலக கோப்பைக்கு முன் பிசிசிஐ போட்ட மாஸ்டர் பிளான்..., இந்திய அணி இதை சிறப்பாக பயன்படுத்துமா??

ஒருநாள் உலக கோப்பை தொடருக்கு தயாராகும் வகையில், சர்வதேச அணிகள் அனைத்தும் தற்போது இருந்தே ஒரு நாள் போட்டிகளில் அதிக கவனம் செலுத்தி வருகின்றன. எதிர்வரும் உலக கோப்பையை கருத்தில் கொண்டே, ஆகஸ்ட் மாத இறுதியில் நடைபெற இருக்கும் ஆசிய கோப்பை தொடர் கூட 50 ஓவர் வடிவில் நடத்த நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

இந்தியாவில் நடைபெற இருக்கும் இந்த ஒருநாள் உலக கோப்பைக்கு இந்திய அணி தயாராகுவதற்காக பிசிசிஐ பக்காவான திட்டம் ஒன்றை செயல்படுத்த உள்ளது. அதாவது, ஆசிய கோப்பை தொடர் ஆகஸ்ட் மற்றும் செப்டம்பரில் முடிவடைந்த பிறகு, தனது சொந்த மண்ணில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை இந்திய அணி விளையாட உள்ளது. இந்த போட்டிகள் முறை, செப்டம்பர் 22, 24 மற்றும் 27 ஆகிய தேதிகளில் மொஹாலி, இந்தூர் மற்றும் ராஜ்கோட் மைதானங்களில் நடைபெற இருக்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here