
இந்தியாவில் ஒருநாள் உலக கோப்பை தொடரின் 13வது சீசன் தற்போது அரையிறுதி போட்டியை எதிர்நோக்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 10 அணிகள் பங்கு பெற்றுள்ள இந்த தொடரில், ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுக்கு எதிராக தலா ஒரு முறை மோதி வருகின்றனர். இந்த போட்டிகளின் முடிவில், புள்ளிப்பட்டியலில் முதல் 4 அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெறும். இதன்படி, இந்திய அணியானது விளையாடிய 8 போட்டிகளையும் வென்று அரையிறுதிக்கு முதல் அணியாக தகுதி பெற்றுள்ளது.
Enewz Tamil WhatsApp Channel
இதனை தொடர்ந்து, தென் ஆப்பிரிக்க அணியும் 8 போட்டிகளில் 6 ல் வெற்றி பெற்று 12 புள்ளிகளுடன் அரையிறுதிக்கு முன்னேற முன்னிலை வகிக்கிறது. இந்நிலையில், அரையிறுதிக்கு முன்னேறும் வாய்ப்பை உறுதி செய்யும் நோக்குடன், இன்று (நவம்பர் 7) 3வது இடத்தில் இருக்கும் ஆஸ்திரேலிய அணியானது 6வது இடத்தில் உள்ள ஆப்கானிஸ்தான் அணியை எதிர்கொள்ள இருக்கிறது. இந்த போட்டியை ஆஸ்திரேலிய அணி வெல்லும் பட்சத்தில் அரையிறுதிக்கு முன்னேறும் வாய்ப்பை உறுதி செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒரு வேளை ஆப்கானிஸ்தான் அணி வென்றால், அரையிறுதி வாய்ப்பை ஆப்கானிஸ்தான் பெற அதிக வாய்ப்பு உள்ளது.