இந்தியாவில் நடைபெறும் உலக கோப்பைக்கான டிக்கெட் விற்பனை…, வெளியான முக்கிய அப்டேட் இதோ!!

0
இந்தியாவில் நடைபெறும் உலக கோப்பைக்கான டிக்கெட் விற்பனை..., வெளியான முக்கிய அப்டேட் இதோ!!
இந்தியாவில் நடைபெறும் உலக கோப்பைக்கான டிக்கெட் விற்பனை..., வெளியான முக்கிய அப்டேட் இதோ!!

இந்தியாவில் நடைபெற இருக்கும் ஒருநாள் உலக கோப்பை தொடருக்கான எதிர்பார்ப்பு உலக அளவில் உள்ள கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. இந்த உலக கோப்பை தொடர் வரும் அக்டோபர் மாதம் 5ம் தேதி தொடங்க உள்ள நிலையில், சர்வதேச அணிகள் அனைத்தும் உலக கோப்பையை வெல்ல தீவிர பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். இது ஒரு புறம் இருக்க, இந்த உலக கோப்பை போட்டியை நேரில் காணுவதற்கான டிக்கெட் விற்பனை குறித்த முக்கிய அப்டேட்டை ஐசிசி வெளியிட்டுள்ளது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

அதாவது, ஆகஸ்ட் 15 ஆம் தேதி முதல் டிக்கெட் விற்பனைக்கான பதிவு தொடங்க உள்ளது. இது குறித்த விவரங்களை ஐசிசி இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம். மேலும், இந்திய அணி விளையாடாத மற்ற அணிகளுக்கு இடையிலான போட்டியின் டிக்கெட் விற்பனை வரும் ஆகஸ்ட் 25 ஆம் தேதி முதல் தொடங்க இருக்கிறது. இந்திய அணி விளையாட கூடிய போட்டிக்கான டிக்கெட் விற்பனை ஆகஸ்ட் 30 ஆம் தேதி முதல் செப்டம்பர் 3 ஆம் தேதி வரை விற்பனைக்கு வரவுள்ளது. அரையிறுதி மற்றும் இறுதிப் போட்டிக்கான டிக்கெட் விற்பனை செப்டம்பர் 15ம் தேதி தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தானை பந்தாடிய இந்திய அணி…, ஆசிய சாம்பியன்ஷிப்பில் அசத்தல் வெற்றி!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here