Thursday, April 25, 2024

சுவையான “ஓட்ஸ் கொழுக்கட்டை” – லாக் டவுன் ஸ்பெஷல்!!

Must Read

வீட்டில் இருக்கும் நமக்கு பொழுதுபோவது ரொம்பவே போரிங் விஷயம். வீட்டிலும் இப்பொது அம்மா எப்போதும் உள்ள அதே ரெசிபி தான் செய்து தருகிறார்கள் என்று குழந்தைகளுக்கு கவலை. அதற்கு தான் வீட்டில் உள்ள சில பொருட்களை வைத்து ஈசியாக மற்றும் டேஸ்ட்டியான டிஷ் ” ஓட்ஸ் கொழுக்கட்டை” இதோ..

தேவையான பொருட்கள்:

  • ஓட்ஸ் – 1 கப்
  • பெரிய வெங்காயம் – 2 ( பொடியாக நறுக்கியது)
  • பச்சைமிளகாய் – 2 ( பொடியாக நறுக்கியது)
  • கடுகு, உளுந்து – 3 டீஸ்பூன்
  • கொத்தமல்லி – கொஞ்சமாக ( நன்றாக பொடியாக நறுக்கியது)
  • எண்ணெய் – தேவையான அளவு
  • உப்பு – தேவையான அளவு
  • தேங்காய் துருவல் – 4 டீஸ்பூன்

செய்யமுறை :

  • முதலில், ஓட்ஸ் எடுத்து அதில் கொஞ்சம் சூடான தண்ணீரை அதன் மேல் தெளித்து விடவும். 5 நிமிடங்கள் வரை இது அப்படியே இருக்கட்டும்.
  • ஒரு சட்டியை அடுப்பில் வைத்து, எண்ணெய் ஊற்றவும், எண்ணெய் காய்ந்ததும், அதில், கடுகு உளுந்து போடவும்.
  • கடுகு வெடித்ததும், வெங்காயம் சேர்க்கவும். இது நன்றாக பொன்னிறமாக வரும் வரை கிளறவும்.
  • பின்பு இந்த கலவையை நாம் எடுத்து வைத்துள்ள ஓட்ஸ் இல் சேர்க்கவும். அதில், நறுக்கி வாய்த்த கொத்தமல்லியையும் சேர்க்கவும். நல்ல சின்ன சின்ன உருண்டைகளாக பிடிக்கவும்.
  • இதனை இட்லி சட்டியில் வைத்து பதம் வந்ததும் இறக்கிவிடவும்.

சூடான மற்றும் சுவையான ” ஓட்ஸ் கொழுக்கட்டை” ரெடி!!!

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

உச்ச நீதிமன்ற வழக்கு விசாரணை விவரங்கள் Whatsapp-ல் தான்? தலைமை நீதிபதி சந்திரசூட் அறிவிப்பு!!!

இன்றைய கால கட்டத்தில் தனியார் நிறுவனங்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வாட்ஸ்அப் மூலம் ஊழியர்களுக்கு தகவல்களை தெரிவித்து வருவது வழக்கமாக உள்ளது. இதன் காரணமாக நேரம்...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -