T20 WC 2022: 35 ரன்கள் வித்தியாசத்தில் அயர்லாந்தை வென்ற நியூசிலாந்து!!

0
T20 WC 2022: 35 ரன்கள் வித்தியாசத்தில் அயர்லாந்தை வென்ற நியூசிலாந்து!!

அயர்லாந்து அணிக்கு எதிராக நியூசிலாந்து அணி 35 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, குரூப் 1 புள்ளி பட்டியலில் தொடர்ந்து முதலிடத்தை தக்கவைத்து கொண்டது.

டி20 உலக கோப்பை 2022:

அயர்லாந்து அணிக்கு எதிராக டி20 உலக கோப்பை போட்டியில் நியூசிலாந்து அணி அடிலெய்டு ஓவல் மைதானத்தில் போட்டியிட்டது. இந்த போட்டியில், டாஸ் வென்ற அயர்லாந்து அணியின் கேப்டன் ஆண்ட்ரூ பால்பிர்னி பவுலிங்கை தேர்வு செய்தார். இதையடுத்து, களமிறங்கிய நியூசிலாந்து அணியின் தொடக்க வீரர்கள், ஃபின் ஆலன் (32), டெவோன் கான்வே (28) என வெளியேற கேப்டன் கேன் வில்லியம்சன் தனது அதிரடியை காட்ட தொடங்கினார்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

இவருடன் இணைந்து விளையாடிய க்ளென் பிலிப்ஸ் 17 ரன்களில் பெவிலியன் திரும்ப, டேரில் மிட்செல் மற்றும் கேன் வில்லியம்சன் ஜோடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இதனால், நியூசிலாந்து அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 185 ரன்கள் குவித்திருந்தது. இதில், கேன் வில்லியம்சன் 35 பந்தில் 5 பவுண்டரி 3 சிக்ஸர் உட்பட 61 ரன்களை எடுத்து அசத்தி இருந்தார். அயர்லாந்து சார்பாக ஜோசுவா லிட்டில் அதிகபட்சமாக 3 விக்கெட்டுகளை சாய்த்திருந்தார்.

T20WC.., ரோஹித் போடும் பலே திட்டம்.., இந்திய அணிக்கு வெற்றி கிடைக்குமா??

186 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்கை துரத்திய அயர்லாந்து அணியில் தொடக்க வீரர்கள் பால் ஸ்டிர்லிங்(37), ஆண்ட்ரூ பால்பிர்னி(30) ரன்களில் வெளியேறினர். இவர்களை தொடர்ந்து வந்தவர்கள் அடுத்தடுத்து விக்கெட்டை பறிகொடுக்க அயர்லாந்து அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 150 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தனர். இதனால், நியூசிலாந்து அணி 35 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 7 புள்ளிகளுடன் குரூப் 1 ல் முதலிடத்தை தக்க வைத்துள்ளது. ஆனாலும், மீதமுள்ள போட்டிகளின் அடிப்படையில் புள்ளி பட்டியலில் மாற்றம் ஏற்படவும் வாய்ப்புள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here