உயிர் காக்கும் மருந்துகள் திருட்டு… கமுக்கமாக மூடி மறைத்த மருத்துவமனை!!!

0
Medicines in tablets, capsules and injections on a metal table as a symbol of the pharmaceutical industry

உத்தரகண்ட் மாநிலத்தில், செவிலியர் ஒருவர் இறந்த கொரோனா நோயாளியின் மொபைல் போனை திருடிய வழக்கை விசாரித்தபோது, அந்த மருத்துவமனையிலிருந்து ரெம்டேசிவிர் உட்பட பல உயிர்காக்கும் மருந்துகள் திருடப்பட்டு இருப்பது தெரியவந்துள்ளது.

ENEWZ  WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

மே 18 ஆம் தேதி அன்று, அமன்தீப் கில் என்ற நபர் போலீசாரிடம் தனது தந்தை கொரோனா தொற்று காரணமாக  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளார். தற்போது அவரது தொலைபேசி திருடப்பட்டுள்ளது என புகார் அளித்துள்ளார். காவல் துறை விசாரணையில் சல்மான் அகமது என்ற நபர் தொலைபேசியைப் பயன்படுத்தி வருவது தெரியவந்தது.

காவல்துறையினர் அகமதுவைப் பிடித்துக் விசாரித்தபோது, அவர் அம்மருத்துவமனையில் பணியாற்றிவரும் செவிலியர் ஒருவர் இந்த போனை தந்தாக கூறியுள்ளார். பிறகு அந்த செவிலியர் தான் போனை திருடியது என தெரியவந்துள்ளது. காவல் துறையினரிடம் வசமாக சிக்கிய அந்த செவிலியர், தான் வேலை செய்யும், மருத்துவமனையில் ரெம்டேசிவிர் உட்பட பல உயிர்காக்கும் மருந்துகள் திருடப்பட்டு உள்ளதாகவும், ஆனால் இதுபற்றி போலீசாரிடம் தகவல் எதுவும் மருத்துவமனை தந்ததில்லை என்று கூறி போலீசாரையே அதிர வைத்துள்ளார்.

மருத்துவமனை நிர்வாகம் அதை மறுத்துள்ளது. எங்கள் மருத்துவமனையில் உள்ள மருந்து பொருட்களை பராமரிப்பதில் மிகவும் கடுமையான நெறிமுறைகளைப் பின்பற்றி வருகிறோம். இவ்வாறு இந்த செவிலியர் கூறியிருப்பது ஆதாரம் இல்லாதது என்பதை தெளிவுபடுத்த விரும்புவதாக மருத்துவமனை நிர்வாகம்  பதில் அளித்துள்ளது.

Facebook   => Like செய்ய கிளிக் பண்ணுங்க!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here