நவம்பர் 16 ஆம் தேதி இந்த மாவட்டதிற்கு உள்ளூர் விடுமுறை – மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!!

0
நவம்பர் 16 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை.., மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!!
நவம்பர் 16 ஆம் தேதி இந்த மாவட்டதிற்கு உள்ளூர் விடுமுறை - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!!

மயிலாடுதுறையில் பார்வதி தேவி மயில் உருவம் கொண்ட சிவபெருமானை வழிபடும் விதமாக வருடா வருடம் ஐப்பசி மாதம் பூஜைகள் நடைபெறுவது வழக்கம். கொரோனா காலத்தில் மட்டும் தள்ளிப்போடப்பட்டிருந்த இந்த திருவிழா கடந்த ஆண்டு கோலாகலமாக நடைபெற்றது.

அதே போன்று இந்த ஆண்டும் துலா உற்சவத்தின் முக்கிய நிகழ்வான தீர்த்தவாரியை வரும் 16 ஆம் தேதி கொண்டாடப்படவுள்ளது. பக்தர்கள் பலரும் திரள இந்த திருவிழா நடக்க இருப்பதால் மயிலாடுதுறை மாவட்டத்திற்கு மட்டும் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

அதாவது வருகின்ற 16 ஆம் தேதி மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ளூர் விடுமுறையை அம்மாவட்ட ஆட்சியர் லலிதா அறிவித்துள்ளார். இந்த விடுமுறையை சரிக்கட்டும் விதமாக வரும் 19 ஆம் தேதி (சனிக்கிழமை) பணி நாளாக அறிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here