தமிழகத்தில் உள்ள திரையரங்குகளில் புதிய படங்கள் வெளியிடுவதற்கு அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. மேலும் சிறப்புக் காட்சிகளை அரசு அனுமதித்த நேரங்களில் மட்டும் தான் திரையிட வேண்டும். இந்த சிறப்பு காட்சிகளை திரையிட அனுமதியும் பெற வேண்டும். ஆனால் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திருப்பூரில் உள்ள சக்தி சினிமாஸ் திரையரங்கில் சல்மான் கான் நடித்த டைகர் 3 திரைப்படம் காலை 7:00 மணிக்கும், இரவு 11.50 மணிக்கு சிறப்பு காட்சிகளாக திரையிட்டு உள்ளனர்.

இது குறித்த ஸ்கிரீன் ஷாட் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாக அந்த தியேட்டர் மீது புகார்கள் குவிந்தன. இந்த புகாரை அடுத்து அனுமதியின்றி ஆறு காட்சிகளை திரையிட்ட தியேட்டருக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. தியேட்டர் ஓனர் சுப்ரமணியன் திரையரங்கு உரிமையாளர்கள் மற்றும் மல்டிபிளிக்ஸ் சங்கத்தின் தலைவராக இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.