மாநிலங்களுடன் சண்டையிடுவதற்கான நேரம் இது அல்ல.. டெல்லி முதல்வர் மத்திய அரசிடம் காட்டம்!!!

0
New Delhi, Aug 23 (ANI): Delhi Chief Minister Arvind Kejriwal during an interaction with traders in New Delhi on Sunday. (ANI Photo)

மத்திய அரசு, மேற்கு வங்க தலைமைச் செயலாளர் அலபன் பாண்டியோபாத்யாவை பணிமாற்றம் செய்ததையடுத்து, டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்,”இது மத்திய அரசு மாநில அரசுகளுடன் சண்டையிட வேண்டிய நேரம் அல்ல” என்று கருத்து தெரிவித்துள்ளார்.

ENEWZ  WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

யாஸ் புயலினால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், பாதிப்பின் மதிப்பீடு மற்றும் இது சம்பந்தமான விஷயங்கள் குறித்து அதிகாரிகள் விரிவாக விளக்கமளித்தனர். இந்த ஆய்வு கூட்டத்தில் மேற்கு வங்க முதலமைச்சர் பங்கேற்கவில்லை.

பின்னர் மத்திய உள்துறை அமைச்சகம், மேற்கு வங்க தலைமைச் செயலாளர் அலபன் பாண்டியோபாத்யாவை பணியாளர் பயிற்சி மையத்திற்கு பணிமாற்றம் செய்தது. ஏற்கனவே அலபன் பாண்டியோபாத்யாவிற்கு 60 வயது முடிந்ததை அடுத்து மே 31 அன்று ஓய்வு பெற இருந்தார். மத்திய அரசு அவருக்கு மூன்று மாத கால பதவி நீட்டிப்பு வழங்கியது. இந்நிலையில் திடீரென அலபன் பாண்டியோபாத்யா பணிமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

இதுகுறித்து டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தனது ட்விட்டர் பக்கத்தின் வாயிலாக கருத்து தெரிவித்துள்ளார், அதில் அவர், “இது மாநில அரசுகளுடன் சண்டையிடும் நேரம் அல்ல. அதற்கு பதிலாக கொரோனா வைரஸை ஒன்றாக எதிர்த்துப் போராடுவதற்கும் மற்றும் மாநில அரசுகளுக்கு உதவுவதற்குமான நேரம்”. இவ்வாறு அவர் ட்விட் செய்துள்ளார்.

Facebook   => Like செய்ய கிளிக் பண்ணுங்க!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here