வடகிழக்கு பருவமழை இந்த ஆண்டு கடுமையாக இருக்கும் – புயல் ராமச்சந்திரன் எச்சரிக்கை..!

1

இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழையால் பெரும் வெள்ளப்பெருக்கு அபாயம் ஏற்படும் என புயல் ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

வடகிழக்கு பருவமழை கடுமையாக இருக்கும்..!

இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை இயல்பான அளவை விட குறைவாகவே பெய்யும். கேரளா, கர்நாடகா, மஹாராஷ்டிராவில் முந்தைய ஆண்டுகளை விட, தென்மேற்கு பருவமழை குறையும். அக்டோபர் வரை காற்றுடன் கூடிய, சிறிய மழை நீடிக்கும். வடகிழக்கு பருவமழை இந்த ஆண்டு மிகக் கடுமையாக இருக்கும். தமிழகத்தின் மத்திய மற்றும் தெற்கு மாவட்டங்களில், அருவி போல் மழை கொட்டும். வெள்ளம் பெருக்கெடுத்து ஓடும்.

முன்னெச்சரிக்கையுடன் செயல்படனும்..!

டெலிகிராம் இல் தகவல்களைப் பெற இங்கே கிளிக் செய்யவும்

கடந்த 2015ல் சென்னையில் ஏற்பட்ட பெரு வெள்ளம் போன்று இந்த முறை தெற்கு மற்றும் மத்திய மாவட்டங்களுக்கு வெள்ளம் ஏற்படும்.எனவே விவசாயிகள் முன்னெச்சரிக்கையாக இருப்பது நல்லது. பயிர் மூழ்கி விடும் என்பதால், தாழ்வான பகுதியில் உள்ள விவசாயிகள், நவம்பர், டிசம்பரில் விவசாய பணிகளை தவிர்த்து கொள்வது நல்லது. முன்னெச்சரிக்கையுடன் செயல்பட்டால், வரக்கூடிய பெரும் மழையை, நீராதாரமாக மாற்றி கொள்ளலாம். இல்லையென்றால் வெள்ளமும், அதனால் பொருளாதார இழப்பும், உயிரிழப்பும் ஏற்படும் என்று அவர் கூறினார்.

மேலும் அவர் கணித்துள்ளபடி ஜூலை 20க்குள் வங்க கடலில் புயல் உருவாகி ஒடிசா கடற்பகுதியை கடக்கும் ஆகஸ்டில் இருந்து, கடற்பகுதியில் வலுவான எல் நினோ சூழல் நிலவும். அதனால் புயல் மற்றும் சூறாவளி காற்று அதிக அளவில் ஏற்படும். இடி, மின்னல் தாக்கம் அதிகமாக இருக்கும் அக்டோபர் 20 முதல் 31க்குள் மேக வெடிப்பால் கனமழை பெய்யும். இந்த மழை வடகிழக்கு மாநிலங்களுக்கு அதிக பலனை தரும் அக்டோபர் முதல் ஜனவரி இரண்டாம் வாரம் வரையில் அடைமழை கொட்டும். மேலும் இடி, மின்னல் தாக்குதல், புயல், காற்றழுத்த தாழ்வுப் பகுதி, மேல் அடுக்கு சுழற்சி ஆகியவற்றால், தொடர்ச்சியாக மழை பெய்யும். நிலச்சரிவு, வெள்ளப்பெருக்கு ஏற்படும் என அவர் கூறினார்.

1 COMMENT

  1. கடந்த வருட கணிப்பும் இதே போல தான் இருந்தது ஐயா

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here